
பேராவூரானின் தந்தை பெரியவரசுக்கு இரண்டே இரண்டு வாரிசுகள்.
முதலில் பிறந்தது பாக்கியத்தம்மாள் என்று செல்லமாக அழைக்கப்படும் கூட்டான் குலதிலகவதி பேராவூர் பாக்கியத்தம்மாள் என்பதாகும்.
தந்தை பெரியவரசுக்கு சோதிடத்தில் அபார நம்பிக்கை. சோதிடர்களின் ஆலோசனைக்கு ஏற்ப தனது பாலாவோரை நகரத்தை முற்று முழுதாக தனது மகன் கூட்டான் குலதிலகனுக்கு வாரிசுரிமையை பட்டயம் செய்து கொடுத்துவிட்டான்.
நகரத்தை மகனுக்கு கொடுத்து விட்டு இருபத்தொரு கிராமங்களை பாக்கியத்தமாளுக்கு பட்டயம் செய்து கொடுத்து விட்டான்.

செல்வ செழிப்பும் மக்கள் கூட்டமும் நிறைந்த நகரத்தையும் அதனோடு சேர்ந்த சில கிராமங்களையும் இளையவன் குலதிலகனுக்கு கொடுத்த பெரியவரசு ஏன் மூத்தவளுக்கு சதா இயற்கையோடு போராடவேண்டிய கிராமங்களை பட்டயம் செய்தார் என்பது பலருக்கும் பெரிய அதிர்ச்சியாக இருந்தது.