ஞாயிறு, 8 ஜூலை, 2012

கற்பூரம் தேடிய கழுதை ஒன்று

இரவு மூன்று மணியை கடந்துகொண்டிருக்கிறது ஆனாலும் அந்த வீட்டில் தூக்கம் இல்லை. உஷாவும் பரமும் தாங்கள் பொருந்தாத தம்பதிகள் தான் என்பதை பரஸ்பரம் உணர்ந்துகொள்ளும் கசப்பு மாத்திரையை மாறி மாறி விழுங்கிகொண்டார்கள்.
நாளை ஒரு நடன கச்சேரிக்கு பாட்டு பாட வேண்டியுள்ளது. அட டா இப்படி தூங்காமல் சண்டை பிடித்து கொண்டிருந்தாள் எப்படி நாளை பாட முடியும்?
உஷா அழுது அழுது கலைத்து விட்டாள்.
விஷயம் இதுதான் அந்த நடன நிகழ்ச்சியை தனது வீடியோவில் பதிவு  செய்ய போவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் சொன்ன பொது அவர்கள் மிக அழுத்தமாக மறுத்து விட்டார்கள். பிடிவாதக்கார பரமோ இதை ஒரு கௌரவ பிரச்சனையாக எடுத்துக்கொண்டு நாளை பாட என் மனைவி வரமாட்டா என்று கோபமாக சொல்லிவிட்டான் .
ஏற்பாட்டாளர்கள் ஆடிப்போய் விட்டனர். பலநாள் ஒத்திகை பார்த்து பார்த்து உருவாகிய ஒரு நடன அரங்கேற்ற நிகழ்ச்சியது. இனி திடுதிப்பென்று அதில் மாறுதல் பண்ணவே முடியாது. நடனம் ஆடும் சிறுமியும் பெற்றோர்களும் கூட இரவு தூங்காமல் ஒரே டென்ஷனில் இருந்தார்கள்.

சனி, 7 ஜூலை, 2012

அய்யாவை சுற்றி கேள்விகள் மட்டும்தான்

இது அறுபதுகளில் நடந்த சம்பவம். வெறும் புழுதி படிந்த தலையும் தூசி படிந்த கோட்டுமாக முழு  போதையில் மணிக்கூட்டு கோபுர வீதியில் சுகமாக  அசந்து தூங்கி கொண்டிருந்தார் ஒரு படித்த பெரிய மனிதர்.
 சகல விதமான வழிப்போக்கர்களுக்கும் இது ஒரு புதிய காட்சி அல்ல.அவரின் கதையும் ஓரளவு எல்லோரும் அறிந்ததுதான்.
அந்த படித்த பெரிய மனிதன் சிவசுப்ரமணியம் இந்த இடத்தில் வீழ்ந்து கிடப்பதற்கு பெரிய காரணம் இருப்பது என்னவோ உணமைதான்.
இவரை பற்றி மக்கள் பேசிக்கொள்வது இதுதான்,
இவர்  இளமையில் சாதியில் குறைந்த பெண்ணை காதலித்தார். இதை கண்டு பிடித்த பெற்றோர் தந்திரமாக இங்கிலாந்துக்கு அனுப்பி விட்டார்கள். இவரும் படிப்பு முடித்து வந்து இந்த பெண்ணை சத்தம் போடாமல் கூட்டிக்கொண்டு ஓடி விடலாம் என எண்ணிக்கொண்டே நாட்டை விட்டு புறப்பட்டார்.
சாதி தடிப்புடன் குள்ளநரித்தனமும் கொண்ட இவரது குடும்பத்தினர் இவர் நம்பும்படி இவரது நண்பர் மூலம் இவரது காதலிக்கு வேறு கல்யாணம் ஆகிவிட்டதாகவும் இரண்டு குழந்தைகள் வேறு உள்ளதாகவும் கதை அளந்தார்கள்.இந்த அப்பாவி மனிதன் அதை நம்பி மனம் உடைந்து குடிக்க தொடங்கினார். பின்பு என்ன நிறுத்த முடியாமல் அல்ல அல்ல நிறுத்தத்த விருப்பம் இல்லாமல் குடியே கதியானர்,