ஞாயிறு, 26 மே, 2013

துரத்திகொண்டே இருக்கும் தூவானங்கள் !

ஒட்டவா நகரின் எல்லையில் அமைந்துள்ள ஜெயராஜின் வீட்டில் கடந்த
ஒருவருடமாக எதுவுமே சரியில்லை ; எல்லோரும் ரசிக்கும் படி அழகாக சென்று கொண்டிருந்த அந்தகுடும்பத்தில் யார் கண் பட்டதோ எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது,
அந்த வீட்டின் குடும்ப தலைவன் இளமையில் செய்த ஒரு மாபெரும் தவறு முற்றாகவே மறக்கப்பட்டு  விட்டதாகவே இவ்வளவு காலமும் நம்பி இருந்தான் . ஆனால் அது  பூதாகரமாக மீண்டும் தோன்றுகிறதே?
விலாவாரியாக சொல்லாவிட்டால் புரியாது ,
 அந்த வீட்டின்  இரண்டு பிள்ளைகளும் படிப்பை சாட்டி கொண்டு டொராண்டோவுக்கும் சிகாகோவிற்கும் சென்று விட்டார்கள் .
வீடு திடீரென வெறிச்சோடி விட்டது, அந்த வீட்டில்  நிலவிய அமைதியோ ஏதோ ஒரு வெறுமையை தான் காட்டியது .
அன்பான  குடும்ப தலைவியாக இருந்த பிரேமா தற்போது அடியோடு மாறிவிட்டார் . தனது வேலையையும் விட்டு விட்டார் அல்லது அவர்களாகவே நிறுத்தி விட்டார்கள்.
ஜெயராஜுக்கு ஒன்றும் புரியவில்லை.
பிள்ளைகள் இல்லாத  வீட்டின் வெறுமையை அவரும் உணர்ந்தார் .
அடிக்கடி பிள்ளைகளுடன் செல்லில் பேசி பேசி ஏதோ சமாளித்துகொண்டிருந்தார் .
அந்த வெறுமை பிரேமாவை மிகவும் மோசமாக பாதித்தது என்றுதான் சொல்லவேண்டும் , ஆனால் போக போக அந்த வெறுமையையும் தாண்டி வேறு ஏதோ ஒரு விஷயம் பிரேமாவின் மனதை குழப்புவது போல் தோன்றியது  அவள் சற்று மன நிலை பாதிப்படைந்தவர்கள் போல எதற்கெடுத்தாலும் உணர்சிவசப்பட்டு  கலவரப்பட தொடங்கி விட்டார், தனக்குள் அடிக்கடி பேசி கொள்வார் .
கையில் கிடைத்த பொருட்களை திடீர் திடீர் என்று போட்டு உடைப்பார் , கேட்டால்  எந்த பதிலும் வராது அல்லது இடக்கு மிடக்காக ஏதொதோ சொல்லுவார் ,
தனக்கு தலை சரியில்லை என்று தானே சொல்லுவார்,
உளவியல் மருத்துவரிடம் செல்லும்போது மட்டும்  மிகவும் ஒழுங்காக நடந்து கொள்வார்.
அவர்களுக்கும்  கூட பிரேமாவின் மன நிலை சரியாக பிடி படவில்லை .

சனி, 25 மே, 2013

தேவைகள் உன்னை துரத்தும் வரை தான் ....

அவள் ஒரு அழகான ஒரு குட்டி  தீவின் சுகவாசி .அந்த தீவின் ரம்மியத்தை
ரசித்துகொண்டிருந்தாள்  .
அவளை சந்திக்கும் பலரும் வேறு ஒரு பெரிய கற்பனைக்கு எட்டாத அற்புத தீவை பற்றி புகழ்ந்து புகழ்ந்து பேசிகொண்டேயிருந்தர்னர் . அதைப்பற்றிய வர்ணனைகளால் நாளடைவில் அவளுக்கும் எப்படியாவது அந்த அற்புத தீவுக்கு செல்ல வேண்டும் என்று தோன்றி நாளடைவில் அது அவளது ஒரே நோக்கம் என்றாகி விட்டது ,
தான் குடியிருக்கும் குட்டி தீவின் எந்த அழகும் தற்போது அவளை இப்போது அதிகம்  கவர்வதில்லை, எப்போது  அந்த அற்புத தீவை அடைவோம் என்ற ஒரே சிந்தனையில் காலம் கழிந்தது ,
பல நாள் விடா முயற்சியின் பின்பு அவளது எண்ணம் நிறைவேறக்கூடிய தருணம் வந்தது , அந்த அற்புத தீவுக்கு செல்லும் படகு ஒன்று அவளருகில் வந்தது . அவளும் மிக மகிழ்வுடன் படகில் ஏறிக்கொண்டாள் .
செல்லும் வழிதோறும் சொர்க்கம் என்று வர்ணிக்கப்படும் அந்த தீவை பற்றிய பலவிதமான கற்பனைகளுடன் யாத்திரை செய்து  இறுதியில் அந்த தீவை அடைந்ததும் விட்டாள் ,
தனது நோக்கம் நிறைவேறிய மகிழ்ச்சியில் துள்ளி குதித்து ஆனந்தித்தாள் ,
எல்லோரும் குறிப்பிட்டது போலவே அழகான மரங்கள் மலர்கள் சின்ன சின்ன மலை குன்றுகள் ஏராளமான பழவகைகள் கொண்ட அற்புத சோலைகள் எல்லாவற்றிலும் மேலாக அழகான மாந்தர்கள் என்று எல்லோரும் குறிப்பிட்ட நல்ல காட்சிகளையே அவள்  கண்டாள் ,
சில நாட்கள் தன்னை மறந்து தனது பழைய தீவின் சகல ரம்மியங்களையும் மறந்து இருந்தாள் ,
எந்த விடயத்திற்கும் காலம் வேறு வேறு விதமான அர்த்தங்களை தந்து கொண்டிருக்கும் தானே ?

வியாழன், 23 மே, 2013

அது ஒரு காகித கல்யாணம்

மனிஷாவின் தாய் இந்திய  தந்தையோ  வெள்ளைக்காரன்
அவள் சில சமயங்களில்

ஒரு வெள்ளைகாரி போலவும் சிலசமயம் அசல் பஞ்சாபி போலவும் பேசுவாள். ஏராளமான குழப்பங்கள் அவள் மனதில் இருப்பது எனக்கு தெரியும், அவளுக்கு தான் ஒரு இந்திய வம்சாவளி என்ற பெருமையும் அதேசமயம் இந்தியர்கள் மிக மோசமானவர்கள் என்ற அபிப்பிராயம் சேர்ந்தே இருந்தது.
போஸ்டன் பகுதியில் சதா புதிதிதாக இந்தியர்கள் பாகிஸ்தானியர்கள் போன்ற தெற்காசிய மக்கள் வந்த வண்ணமே இருப்பார்கள் . எப்போது புதியவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை மிக அதிகமாக இருந்ததனால் அவளுக்கு ஏராளமான நண்பர்கள் இருந்தனர்.
சதா இந்தியர்களை  திட்டிய படியே அவர்களுக்கு ஓடி ஓடி உதவிசெய்த வண்ணமே இருப்பாள் .
சுமார் முப்பது வயதாகியும் சரியான கணவனோ காதலனோ அவளுக்கு அமையவில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஏராளமான கோரிக்கைகள் அவளை நோக்கி வந்தவண்ணம் இருந்தன . ஆனால் அவளுக்கு எதோ ஒருவரையும் பிடிக்கவில்லை. திடீரென அவனை கல்யாணம் செய்ய போகிறேன் என்று எல்லோருக்கும் சொல்வாள் . பின்பு  சில நாட்கள் கழிந்ததும் அவனை எனக்கு பிடிக்க வில்லை அவன் வெரி boring என்பது போன்ற ஏதாவது ஒரு நொண்டி காரணம் சொல்லுவாள் .
மனிஷா மீது உண்மையான அக்கறை கொண்ட எல்லோருமே ஏறக்குறைய நம்பிக்க இழந்து விட்டனர் , இவளில் ஏதோ ஒரு கோளாறு இருக்கிறது எல்லாவற்றையும் தட்டி கழிக்கிறாள் என்று அலுத்து கொண்டனர்,
ஒரு நாள் என்வீட்டுக்கு வந்து தனக்கு திருமணம் டெல்லியில் நிச்சயமாகி இருக்கிறது என்று சொன்னால் . போட்டோவும் காட்டினாள்.

வியாழன், 9 மே, 2013

விஷ்ணுதாசரின் ஜென்மம் முழுதும் அந்த முகம் ?

அப்புச்சி இப்படி நொறுங்கிடுவார்னு நான் ஒருக்காலும் கருதலையே? அப்புச்சி
எவ்வளவோ நல்ல மனிஷன் ஆனால் ஏதோ போறாத காலம் , அந்த ஸ்ரீ சுதான்ன சிறுக்கியை பிடிச்சிட்டார் ,
அதுகூட பரவாயில்லை ஆனால் அவளை வீட்டுக்கே கூட்டியாந்திட்டரே ?
என்னத்தை சொல்ல ? எல்லாம் தலைவிதி , அவன் என் தலைல எழுதிட்டான் ,
எனக்கு தான் நிறைய விஷயம் புரியல வாழ்க்கைன்னா என்னன்னும் தெரியல,
அப்புச்சி சதா கச்சேரின்னு ஊர் ஊரா சுத்திட்டே இருக்கும் , எந்த ஊருக்கு போனாலும் எனக்குன்னு எதாச்சும் வாங்கிரும் , அதுதான் வாழ்க்கைன்னு வெகுளியா இருந்தேன் ,
 அப்புச்சிக்கு விஷ்ணுதாசர்ன்னுதான் பேர் ஆனா அப்புச்சி அப்புச்சின்னு அதுதான் அவர்பேராயிடுச்சு, என்பேர் சரஸ்வதிஆனா  இப்ப சச்சுவாயிடுச்சு,

அப்புச்சியோட சரியா பேசகூட எனக்கு தெரியல்ல ,
அந்த ஸ்ரீ சுதா அப்புச்சியோட பேசறப்போ எல்லாம் ரொம்ப ரசனையா இருக்கும் அவளுக்கு தான் எத்தனை விஷயங்கள் தெரியும் , சும்மா சொல்ல கூடாது அப்புச்சியை விட அவளுக்கு அறிவும் ஜாஸ்த்தி அழகும் ஜாஸ்த்தி ,
அவமேல நான் பொறாமை பட்டு என்னதான் ஆவப்போவுது ? ஒருவேளை ஆரம்பத்திலேயே நான் பொறாமை பட்டு சண்டை பிடிச்சிருந்தா அப்புச்சி அவளை கைவிட்டிருக்குமோ ?
நான் ஒரு பைத்தியம் அவளோட பாட்டையும் பேச்சையும் நானே ரசிச்சு ரசிச்சு கேப்பேனே ? அப்புச்சிக்கு வேற பெண் சகவாசம்கூட இருக்குன்னும் ஒருவாட்டி சொன்னா ,
என் அப்புச்சி என்னையை விட்டு அவளோடு சாயறார்ன்னு கூட எனக்கு தோணலையே? அவ்வளவு மண்டுகம்,

திங்கள், 6 மே, 2013

அந்த அழகான மல்லிகை சிரிப்பு

தூசிகளின் தலைநகரம் என்று சொல்லக்கூடிய அளவும் மோசமான அளவு
தூசியும் குப்பையும் நிறைந்தது  அந்த பேருந்து நிலையம், எவ்வளவுதான் படு மோசமான நிலையில் இருந்தாலும் மக்கள் கூட்டமோ நெரிசலாக இருக்கும் , வேறு வழி ?
ஒவ்வொரு பேருந்தும் வரும்போது அள்ளிவரும் தூசி இருக்கிறதே சொல்லி மாளாது . விரைவில் ஊர் போய் சேர வேண்டும் என்ற துடிப்பில் இருக்கும் ஜனக்கூட்டமோ அந்த பேருந்தை நோக்கி படுவேகமாக போய் ஏறிவிடுவார்.
அந்த ஜனக்கூட்டத்தில் யாருமே சிரித்து மகிழ்சியோடு முகத்தை வைத்திருக்கும் காட்சியை காணவே முடியாது ,
எப்போதும் ஒரு கடுமையான பாவத்தோடு அல்லது முகத்தை தொங்க போட்டுகொண்டு ஏதோ நோய் வாய்ப்பட்டவர்கள் போல காட்சி அளிப்பார்கள் ,
இது ஏன் என்று விளக்கப்போனால் பெரிய விவகாரமாகிவிடும் , அவ்வளவு இலகுவில் சொல்லி விடக்கூடிய செய்தியும் அல்ல அது .
எந்த ஒரு காரிருளிலும் ஒரு சிறிய ஒளியாவது தெரியும் அதே போல எவ்வளவு பிரகாசமான ஒளியினுள்ளும் ஒரு இருள் இருக்கும் என்று எங்கேயோ நான் படித்த ஞாபகம் ,
எந்தவித மென்மையான உணர்வுகளும் இல்லாது மிகவும் இறுக்கமான ஒரு அமைதி நிலவிய அந்த  பேருந்து நிலையத்தில் ஒரு வித்தியாசமான வேடிக்கையான  காட்சி  அடிக்கடி  அரங்கேறி கொண்டிருந்தது ,
சுமார் அறுபது வயது மதிக்கத்தக்க உயரமான மனிதன் வேடிக்கையான விளம்பரங்கள் எல்லாம் எழுதப்பட்டிருந்த ஆடைகள் அணிந்து ஆடி பாடி அதிஷ்ட லாபச்சீட்டுக்களும்  மற்றும் இனிப்பு பலகாரங்கள் போன்ற சிறு சிறு
பொருட்களும் விற்று கொண்டிருப்பார் .