திங்கள், 1 மே, 2017

4 கோபுரம் கழுவப்போன தீவட்டிகள் - பாலாவோரை .. 4 - பாகம் - பார்பனர்கள் புலாலை தவிர்க்க தொடங்கினர்....

சமண பள்ளிகள் பார்பன கோவில்கள் ஆக மாறத்தொடங்கியது 
பேராவூர் பெரியவரசுவின் வாரிசு குலதிகலனுக்கு மிகவும் நெருங்கிய ஆலோசகர்களாக பல புதிய பார்ப்பனர்கள் அரண்மனைக்கு உள்ளே நுழையத் தொடங்கினார்கள். .  மாலைநேரங்களில் அழகான பார்பன பெண்களின் ஆடல் பாடல்கள் அவனது அரண்மனையில் அரங்கேற தொடங்கின. அவர்களின் கவர்ச்சியில் ஓரளவு மயங்கி சொந்த புத்தியை இழந்து அவர்களின் வாழ்க்கை முறையையே பெரிதும் பின்பற்ற தொடங்கினான்.
பார்பனர்கள் ஆலோசனைப்படி சமண பள்ளிகளை மெதுவாக பார்பன கோவில்களாக மாற்ற முயற்சிகளை மேற்கொள்ளலானான்.
சமணப்பள்ளிகள் மக்களுக்கு கல்வி போதித்து கொண்டிருந்தன .எனவே அவற்றை இலகுவில் கோவில்களாக மாற்றுவதில் ஏராளமான சிக்கல்கள் இருந்தன. மக்கள் பொதுவாக அறிவில் சிறந்தவர்களாகவும் ஓரளவு நேர்மையான குணத்துடனும் இருந்தார்கள்.
பார்பன வேள்விகளில்  வெட்டப்படும் ஆடு மாடுகளின் குருதி ஆறாக ஓடியது.  நெருப்பில் வாட்டி கொடுக்கப்படும் ஆகுதியின் சுவையில் மக்களில் பெரும் பாலோர் மயங்கி போனார்கள். அது போதாதென்று ஈற்றில் வழங்கப்படும்  சோமபானத்தின் போதையிலும் மக்கள்  தங்கள் சுய நினைவுகளை இழந்தார்கள்.  எப்பொழுதும் பார்பனர்கள் பல காம இச்சைகளை தூண்டும் ஓவியங்களையும் கதைகளையும் தாராளமாக வாரி வாரி வழங்கினார்கள். எப்படி குலதிலகனை மயக்கினார்களோ அதே போன்று  பொதுமக்களையும் மயக்க முயற்சித்தார்கள். அதில் கணிசமான வெற்றியும் கண்டார்கள்.
அவர்கள் கூறும் ஏராளமான புராண கதைகள் பெரும்பாலும் காம கிளர்ச்சி ஊட்டும் கதைகளாகவே இருந்தன. அவற்றை எல்லாம்  உருவாக போகும் கோவிலில் சித்திரங்களாகவும் சிற்பங்களாகவும் வடிக்க வேண்டும் என்று குலதிலகன் வேண்டி கொண்டான். அப்பொழுதானே  பிற தேசத்தவர்களும் கோவிலை பார்க்க வருவார்கள்,வருமானமும் பெருகும்.    


உழைப்பையும் வாழ்க்கை நெறிமுறைகளையும் புதிய பார்ப்பனீய வரவு புறந்தள்ளியது . அதனால் அவர்களின் குடும்ப பொருளாதார நிலை மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது.
குலதிலகனின் மோசமான ஆட்சியில் பேராவூர் பெரியவரசு பரிபாலித்த  பாலாவோரை நகரம் தனது அழிவை நோக்கி போய்கொண்டிருந்தது.  மக்கள் தங்களது நிலபுலன்களை விற்று விட்டு வேறு தேசங்களுக்கு போக
தலைப்பட்டனர்  .
நாட்டு மக்களின் இயலாமையை பற்றிய எந்தவொரு புரிதலும் இன்றி குலதிலகன் சதா ஒன்றிரண்டு பார்பன அழகிகளின் சகவாசத்திலும் ,ஏனைய நேரங்களில் பார்பன பூசாரிகளின் வேத புருடாக்களை செவி மடுப்பதுமாக இருந்தான்.
தன்புத்தியை மொத்தமாக இழந்துவிட்ட குலதிலகன் பார்ப்பனர்களின் வேத மந்திரங்களும் அவர்களால் பூஜிக்கப்படப் போகும் நேமிநாதர்  கோவிலும் தனக்கு சகல மேன்மைகளையும் அளிக்கும் என்றும் நம்பினான். 
அரசன் தங்கள் கட்டுப்பாட்டில் முழுவதுமாக வந்ததும் மெதுவாக தங்கள் நிலப்பறிப்பு சூழ்சிகளை ஆரம்பித்தார்கள் .
பார்பன அழகி மேனகை பிராட்டியார் ஒருநாள் குலதிலகனோடு கொஞ்சம் கோபித்து கொண்டு தனது வீட்டுக்கு போய்விட்டாள். குலதிலகன் மிகவும் ஆடிப்போய்விட்டான்.  கொஞ்சகாலமாக மேனகா பிராட்டியோடுதான் குலதிலகன் சதா காணப்பட்டான் . அவளின் அழகில் மயங்கினானா அல்லது அறிவினால் கவரப்பட்டானா என்பது வரலாற்றில் சரியாக பதியப்படவில்லை.  இரண்டு நாட்கள் பித்து பிடித்தவன் போல எவருடனும் சரியாக பேசமால் சோமபானத்தை அளவுக்கு அதிகமாக அருந்தி கொண்டிருந்தான். குலதிலகனின் சார்பாக சென்ற தோழியர்களின் கோரிக்கை ஏற்ப மூன்றாம் நாள் மேனகா பிராட்டி குலதிலகனின் அரண்மனைக்கு வந்தாள். உணர்ச்சி மேலிட்ட குலதிலகன் அவள் கேட்பது எதையும் கொடுப்பதற்கு தயாராக இருந்தான். முற்று முழுதாக மேனகா பிராட்டியின் கைப்பொம்மையாக குலதிலகன் மாறினான்.
பேராவூர் பாலவோரையின் ஆட்சி அதிகாரம் மின்னாமல் முழங்காமல் ஒரு பார்பன அழகியின் கைக்குள் போனது இப்படித்தான்.
சமண பள்ளிகளில் இருந்த ஆசிரியர்கள் நீக்கப்பட்டனர். குலதிலகனின் பார்பன ஆலோசகர்களால் அவை பார்ப்பனர்களின் வீடுகளாகவும் மடங்களாகவும் மாற்றப்பட்டது. சமண தீர்த்தங்காரர்களின் பள்ளிகள் என்று அழைக்கப்பட்ட் கோவில்கள் வைதீக வேத மந்திர கோவில்களாக மாற்றப்பட்டன.
என்னதான் பூச்சுக்களை பூசி வேள்விகள் நடத்தி சோமபானம் வழங்கினாலும் சாதாரண மக்கள் ஒருபோதும் இந்த பார்பனர்களை பெரிதாக மதிப்பதில்லை.
அரசனை ஏமாற்றி பெற்றுக்கொண்ட ஏராளமான ஊர்கள் வயல்கள் எல்லாம் இருந்தாலும் பாலவோரை மக்கள் பார்பனரகளை மதிப்பதே இல்லை .அந்த பார்பனர்களை ஆத்மீக பெரியவர்களாகவும் ஏற்று கொள்ளாமல் புறந்தள்ளினார்கள்.
மக்கள் தங்களது வேதமந்திர ஆகம பூசைகள் மக்களை பெரிதாக கவராமை பார்பனர்களை விட குலதிலகனை பெரிதும் கவலைக்கு உள்ளாக்கியது. மக்கள் தங்களை வெறுத்தால் எப்படித்தான்  அங்கு காலூன்ற முடியும் என்ற கவலை  ஆழ்ந்தனர்.

ஒன்றும் இல்லாமல் வெறும் அகதிகள் நிலைக்கு தள்ளப்பட்ட துறவிகளுக்கு மக்களிடம் இருந்த மதிப்பும் ஆதரவும் தங்களால் ஒருபோதும் வெல்ல முடியாதது ஏன் என்பதை மெதுவாக விளங்கிகொண்டனர்.

திருக்குறளில் உள்ள "கொல்லானை புலாலை உண்ணானை  எல்லாவுயிரும் கைகூப்பி தொழும்"  என்ற சமண   நெறி கோட்பாடு மக்கள் மனதில் ஆழமாக வேரூன்றிய பேருண்மையை  காலம் தாழ்த்தியாவது  தெரிந்து கொண்டனர்.
குலதிலகன் அரண்மனையில் கூடிய பார்பனர்கள் இந்த பேருண்மையை அரசனுக்கு தெரியப்படுத்தினர் .நீண்ட ஆலோசனைக்கு பின்பு  தாங்களும் தற்காலிகமாவது  கொல்லாமையை கடைப்பிடிக்க வேண்டுவது அவசியம் என்ற முடிவுக்கு வந்தனர்.
மிகுந்த மனவருத்தத்துடன் கொல்லா நோன்பை இனி கடைப்பிடிக்க முடிவு செய்தனர். ஆனாலும் தங்கள் இந்திரன் போன்ற தேவர்களை மகிழ்விக்க காலம் காலமாக செய்யப்படும்  யாகங்களை செய்யவேண்டுமே?
அதற்காக வேள்வியில்  மிருகங்களை பலியிடுவதற்கு பதிலாக இரத்த சிவப்பு குங்குமத்தையும்  பசு நெய்யையும், தரப்பை புல்லால் உருவத்தை செய்து அவற்றை எல்லாம் தீயில் இட்டு பொசுக்கி தங்கள் யாகத்தை செய்யலாம் என்று முடிவெடுத்தனர்..
மக்களின் ஞாபக மறதியில் நம்பிக்கை வைத்த கயவர்கள் தற்போது புதிதாக தூய புலால் உண்ணாத பார்பனர்கள் வேஷம் போட்டனர். பசுவை கோமாதா என்றும் ஆகாயம் நீர் நெருப்பு நிலம் பயிர் பச்சை எல்லாம் தெய்வங்களே என்றும் அவற்றிக்கு வைதீக பூஜைகளை செய்யதொடங்கினார்கள். புரியாத பாசையில் வெள்ளை உடுத்தி வேஷம் போட்ட பார்ப்பனர்களின் ஆன்மீக வேஷத்தில் மெல்ல மெல்ல மக்கள் ஏமாற தொடங்கினர்.
நேமிநாத தீர்த்தங்காரர்  வேங்கடாசலபதியானார்
சமணர்களை விட அதிகமாக ஜீவகாருண்யம் பேசினார்கள். சமணர்களின் நூல்களை எல்லாம் தங்களின் வேதங்கள் என்றனர்.
சமண பள்ளிகளில் இருந்து பல சமணர்கள் துரத்தி விரட்டப்பட்டனர். வைதீக பார்ப்பனீய கோட்பாடுகளை ஏற்று கொண்டவர்களுக்கு எல்லா சலுகைகளும் அளிக்கப்பட்டன.
அரசனும் ஆட்சியும் வைதீக பார்பனீயத்தை தழுவியதால் அதை மறுத்தவர்கள் இழிந்த சாதியினராக சமுகத்தை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டனர், அவர்களின் நிலபுலங்கள் பலவும் அரசினாலும் அரசின் செல்ல பிள்ளைகளான பார்பனர்களாலும் சூறையாடப்பட்டது.
சமண பள்ளிகளை சேர்ந்த துறவிகள் குகைகளை நோக்கி செல்ல தொடங்கினர்.
சமண தீர்த்தங்காரர்களின் பெயர்கள் உள்ள சமண பள்ளிகளின் பெயர்கள் எல்லாம் பார்ப்பனீய பெயர்களாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

குலதிலகனால் நேமிநாதர் சமண பள்ளி என்று தொடங்கப்பட்ட சமண தலம் வேங்கட பாலாஜி கோவில் என்று பெயர் மாற்றப்பட்டது.
குலதிலகனின் இந்த கொடுங்கோல் ஆட்சி பற்றிய எல்லா செய்திகளும்  ஒற்றர்கள் மூலம் தவறாது   பாக்கியத்தம்மாளின் காதுக்கு எட்டிய வண்ணமே இருந்தது. ( தொடரும்)

கருத்துகள் இல்லை: