ஞாயிறு, 26 மே, 2013

துரத்திகொண்டே இருக்கும் தூவானங்கள் !

ஒட்டவா நகரின் எல்லையில் அமைந்துள்ள ஜெயராஜின் வீட்டில் கடந்த
ஒருவருடமாக எதுவுமே சரியில்லை ; எல்லோரும் ரசிக்கும் படி அழகாக சென்று கொண்டிருந்த அந்தகுடும்பத்தில் யார் கண் பட்டதோ எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது,
அந்த வீட்டின் குடும்ப தலைவன் இளமையில் செய்த ஒரு மாபெரும் தவறு முற்றாகவே மறக்கப்பட்டு  விட்டதாகவே இவ்வளவு காலமும் நம்பி இருந்தான் . ஆனால் அது  பூதாகரமாக மீண்டும் தோன்றுகிறதே?
விலாவாரியாக சொல்லாவிட்டால் புரியாது ,
 அந்த வீட்டின்  இரண்டு பிள்ளைகளும் படிப்பை சாட்டி கொண்டு டொராண்டோவுக்கும் சிகாகோவிற்கும் சென்று விட்டார்கள் .
வீடு திடீரென வெறிச்சோடி விட்டது, அந்த வீட்டில்  நிலவிய அமைதியோ ஏதோ ஒரு வெறுமையை தான் காட்டியது .
அன்பான  குடும்ப தலைவியாக இருந்த பிரேமா தற்போது அடியோடு மாறிவிட்டார் . தனது வேலையையும் விட்டு விட்டார் அல்லது அவர்களாகவே நிறுத்தி விட்டார்கள்.
ஜெயராஜுக்கு ஒன்றும் புரியவில்லை.
பிள்ளைகள் இல்லாத  வீட்டின் வெறுமையை அவரும் உணர்ந்தார் .
அடிக்கடி பிள்ளைகளுடன் செல்லில் பேசி பேசி ஏதோ சமாளித்துகொண்டிருந்தார் .
அந்த வெறுமை பிரேமாவை மிகவும் மோசமாக பாதித்தது என்றுதான் சொல்லவேண்டும் , ஆனால் போக போக அந்த வெறுமையையும் தாண்டி வேறு ஏதோ ஒரு விஷயம் பிரேமாவின் மனதை குழப்புவது போல் தோன்றியது  அவள் சற்று மன நிலை பாதிப்படைந்தவர்கள் போல எதற்கெடுத்தாலும் உணர்சிவசப்பட்டு  கலவரப்பட தொடங்கி விட்டார், தனக்குள் அடிக்கடி பேசி கொள்வார் .
கையில் கிடைத்த பொருட்களை திடீர் திடீர் என்று போட்டு உடைப்பார் , கேட்டால்  எந்த பதிலும் வராது அல்லது இடக்கு மிடக்காக ஏதொதோ சொல்லுவார் ,
தனக்கு தலை சரியில்லை என்று தானே சொல்லுவார்,
உளவியல் மருத்துவரிடம் செல்லும்போது மட்டும்  மிகவும் ஒழுங்காக நடந்து கொள்வார்.
அவர்களுக்கும்  கூட பிரேமாவின் மன நிலை சரியாக பிடி படவில்லை .

பழகும் அனைவரும் விதம்விதமான ஆலோசனைகளை அள்ளி வீச தொடங்கினர் .
அதில் சில புண்ணிய வான்கள் மந்திர தந்திர சாத்தான் விவகாரங்களையும் அறிவுரைகளாக சொன்னார்கள்,
பிரேமாவின் மனதில் ஏதோ ஒரு பெரும் பாதிப்பு இருப்பது தெரிந்தது  ஆனால் அதை போக்கும் மார்க்கம் தான் தெரியவில்லை ,
பிரேமாவின் மனதில் இளமையில் ஏற்பட்ட ஒரு பாதிப்பு தான் இந்த மாற்றங்களுக்கு காரணமாக இருக்கும் என்று அபிப்பிராய பட்டார்கள்.
அவர்கள் கொடுக்கும் மாத்திரைகள் தற்காலிகமாக அவரது வேகத்தை குறைக்க அல்லது தூங்க வைக்க மட்டுமே பயன்பட்டது ,
அவர்களது பெரிய வீட்டிற்கு ஒரு உதவிக்கும் வசதியாக ஒரு அறையை வாடகைக்கு விட்டார்கள்.
அவர்களின் வீட்டு  அறைக்கு வந்த  சுதாவை பிரேமாவுக்கு மிக நன்றாக பிடித்து விட்டது,
சிலமாதங்களுக்குள் பிரேமாவும் சுதாவும் அக்கா தங்கச்சி போல பழக ஆரம்பித்து விட்டார்கள் .
யார் செய்த புண்ணியமோ சுதா உண்மையிலேயே மிகவும் சுவாரசியமான ஒரு பெண்ணாக இருந்தாள்.
அந்த பெரிய வீட்டில் தற்போது உண்மையிலேயே மீண்டும் ஒரு வசந்தம் வீச தொடங்கியது என்றே சொல்ல வேண்டும் ,
ஒரு மாதிரி இரண்டு வருடங்கள்  ஓடிவிட்டன .
அவர்களின் பிள்ளைகள் விடுமுறையில் வரும்போதெல்லாம் அவர்களும் சுதாவும் பழகும் விதத்தை பார்த்தால் ஒரே குடும்பம் போல தான் தோன்றும் , அவ்வளவு அன்னியோன்யம் ,
ஜெயராஜின் அதி புத்திசாலிதனத்தால் அவர்களின் மகிழ்ச்சிக்கு  ஆபத்து வந்தது ,
சுதாவிடம் இருந்து இப்போதெல்லாம் வாடகை என்று எதுவும் அவர்கள் வாங்குவதில்லை . அதுவும் அல்லாமல் சுதா ஒரு நிரந்தர விருந்தாளியாகவே மாறிவிட்டிருந்தாள் . அதில் சுதாவின் தவறு எதுவும் கிடையாது,
பிரேமாவுக்கு சுதாவின் மீதிருந்த ஈடுபாடு அவ்வளவு ஆழமாக இருந்தது,
ஆரம்பத்தில் அது மிக நல்ல ஒரு ஏற்பாடாகவே ஜெயராஜும் கருதி இருந்தான்.
பலவிதமான குடும்ப பட்ஜெட் கோளாறுகளால் சுதாவின் மூலம் ஏதாவது ஒரு வருமானம் வரவேண்டுமே என்று ஜெயராஜ் நினைத்ததில் தவறு இல்லை .

சுதா இருக்கும்அறையை வேறு யாருக்காவது வாடகைக்கு விட்டால் கொஞ்சம்  டாலர் கிடைக்குமே  என்ற பொருளாதார ஆலோசனையை பிரேமாவிடம் கூறிய போதுதான் பிரேமாவின் மனதில் உள்ள கோபம் புரிந்தது உண்மையில் அவன் அவளை பார்க்க பயந்தான் ,  அவள் இன்னும் பூரணமாக குணமாக வில்லை என்று  தெரபிஸ்ட்டுக்கு போன் பண்ணினான் ,
பிரேமா ஜெட் வேகத்தில் எழுந்து போய் அறைக்கதவை சாத்தி கொண்டாள் , ஒரே கூச்சல்! பொருட்களை எல்லாம் எடுத்து எறிந்து கொண்டிருக்கும் சத்தம் கேட்டது
அது மட்டுமல்ல  வாயில் வந்ததெல்லாம் பேச தொடங்கினாள் .

 நான் சும்மா ஒரு ஐடியாதான்  சொன்னேன் அல்லாது வேறு ஒன்றும் இல்லை என்று மீண்டும் மீண்டும் சொன்னான் ,
பிரேமாவின் மனநிலை  ஒன்றுமே புரியவில்லை ,
கதவை திறக்காமல் இருக்கவே  பயம் கொண்டது  
சுதாவுக்கு போன் பண்ணி உடனே வரச்சொன்னான்
மிக மோசமான ஒரு மன நிலையில் பிரேமா இருப்பது புரிந்தது ,
சுதாவே  கைகொடுத்தாள் .
ஆண்டி ஆண்டி என்று பிரேமாவை ஆசுவாசபடுத்தி ஆறுதல் வார்த்தைகள் சொல்லி ஒரு மாதிரி அமைதி படுத்தினாள் .
பிரேமா திருப்பி திருப்பி  .என்னை விட்டிட்டு போவியா என்று சுதாவை கேட்டுகொண்டே  இருந்தாள் .
சுதாவும் பிரேமாவுக்கு  மீண்டும் மீண்டும் சத்தியம் செய்வதுமாக இருந்தாள் .
இருவரும் ஒருவரை ஒருவர்  தாஜா பண்ணி கொண்டு இருப்பதை பார்க்கவே ஒரு மாதிரியாக இருந்தது . பார்க்க பார்க்க எனக்கு இப்ப பைத்தியம் பிடிக்கும் போல்  தோன்றியது ,
சுதாவால் எங்களுக்கு நல்ல நன்மைகள் கிடைத்திருப்பது உண்மைதான் . ஆனால் அதற்காக சுதாவுக்கு நாம் சற்று அதிகமாகவே செலவு செய்வது தேவை இல்லாத ஒன்று என்று எனக்கு பட்டது,
இப்போது அவர்கள் இருவரும் எதோ ஆர்ட் கிளாஸ் என்று வேறு போகிறார்கள் , சுதாவுக்கும் சேர்த்து பிரேமா தான் பீஸ் கட்டியிருப்பது பிள்ளைகளுக்கு தெரியாது ,
எமது சொந்த விடயங்களை எமது தெரபிஸ்டிடம் எந்த வித ஒளிவு மறைவும் இன்றி கூறுவோம்,
 இந்த விடயத்தை அவரிடம் சொன்னேன் , அவர் ஒரு வெள்ளைக்காரர் எமது கலாச்சாரம் பற்றியோ மனித வாழ்வு பற்றியோ எதிலும் ஒரு வித்தியாசமான 
கருத்துகள் அவரின் பேச்சில் அடிக்கடி வரும் ,
இந்த முறை அவர் எனது தலையில் ஒரு பெரிய குண்டை தூக்கி போட்டார் ,
ஆண் பெண் உறவுகள் பற்றியும் அல்லது  வேறு மாதிரியான உறவுகள் பற்றியும் அவர் அடிக்கடி கூறும் கருத்துக்கள் போன்றே பிரேமா சுதா நட்பு பற்றி சந்தேகம் தெரிவித்தார் . அது மட்டும் அல்ல அவர்களின் அந்த நட்பு அல்லது அன்பு  பிரேமாவுக்கு ஒரு தெரபி போல உதவி செய்வதாயும் குறிப்பிட்டார் ,
இந்த மனிசனுக்கு எங்களை பற்றி ஒன்றும் தெரியவில்லை . எதோ சராசரி வெள்ளைக்கார வாழ்க்கையை போல எண்ணி வாயிலே வந்ததை கதைக்கிறான் பாவி என்று எண்ணி கொண்டேன் ;
உண்மையில் பிரேமாவை பற்றி சுதாவுக்கு தான் அதிகம் தெரியும் , ஆனாலும் அவளுக்கும் கூட சில விஷயங்கள் மர்மமாகவே இருந்தது.
ஒருநாள்  ஒரு பாக்கில் உட்கார்ந்து பேசும் பொழுது மிக சாதரணமாக கேட்டாள் . ஆண்டி நீங்கள் யாரையாவது லவ் பண்ணி இருக்கறீங்களா ?
பிரேமா முகம் மாறியது தான் தவறான கேள்வியை கேட்டு விட்டதை உடனே புரிந்து கொண்ட சுதா சமாளித்தாள் சும்மா ஒரு ஜோக் ஆண்டி என்றாள் .
மிக மெல்லிய குரலில் ஆனால் உறுதியான குரலில் பிரேமா சொன்னாள்,அந்த காலத்தில் ஒருத்தனை லவ் பண்ணினேன் .
ஆனா அவன் சுயிசைட் பண்ணிட்டான் என்று குண்டொன்றை தூக்கி போட்டாள் !

சுதாவுக்கு திகைப்பில் என்ன கேட்பதேன்றே தெரியவில்லை .
 .
மீண்டும் பிரேமாவே பேசினாள் : அது உண்மையா சுயிசைட் தானோ என்றே சந்தேகமாக இருக்கு என்றவள் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தாள் .

சுதாவுக்கு வார்த்தைகளே வரவில்லை , அந்த அமைதியை குலைக்க பயந்தாள்,
அவன்  வீட்டில டிரைவராக இருந்தான்!
அது உண்மையில் தற்கொலைதானா என்று தெளிவாக சொல்ல முடியாது என்று சுதாவுக்கு புரிந்தது .
ஆனாலும் தயங்கி தயங்கி கேட்டாள், எப்படி?
பதில் ஒன்றும் சொல்லாமல் கலங்கி கொண்டிருந்தாள்/
சுதாவுக்கு எந்த வார்த்தைகளும் வரவில்லை ,
பிரேமாவின்  கதைகளை கேட்டு கொண்டு இருந்தது  பிரேமாவுக்கு  பெரும் ஆறுதலை கொடுத்து ,
சுதா உண்மையில் எனக்கும் கூட இன்னும் சரியாக தெரியாது ஆனால்  ஏதோ செய்திருக்கிறார்கள்  என்று எனக்கு இப்ப சந்தேகமாக இருக்கு ,
நீ கவனமாக இரு  ஜெயராஜ் ஒரு மோசமான ஆள்  என்றபடி கையை  இறுக பிடித்தாள்.
சில விஷயங்கள் புரிந்தது போலவும் புரியாதது போலவும் இருந்தது.
ஜெயராஜ் ஒரு இறுக்கமான மர்மத்தை தன்னை சுற்றி பரப்பி உள்ளான் என்று ஏற்கனவே சுதாவுக்கு சந்தேகம் இருந்தது , அந்த கால வில்லன் ஒருவன் இன்று ஒரு குணசித்திர கதா பாத்திரமாகி கொண்டிருப்பது போலத்தான் அவன் என்று எண்ணினாள்.

இப்போதெல்லாம் ஜெயராஜ் பிரேமாவிடம் பேசுவதே குறைவுதான் , இருவரும் ஒரு ஹொஸ்டலில் தங்கி இருப்பவர்கள் போல தான் பழகிகொள்கிறார்கள்.
வழக்கமாக வெறும் கருப்பு வெள்ளை படம் போல் தெரியும் பிரேமாவின் முகம் சுதாவை காணும் போதெல்லாம்  புத்தம் புதிய கலர்படம் போல தெரிந்தது ,
 ஜெயராஜின் மனதில் ஏராளமான குழப்பங்கள்,
முக்கியமாக  இரு பெண்களும் பழகும் விதம் அவனது நிம்மதியை குலைத்து கொண்டிருந்தது
ஒரு நாள் தற்செயலாகவோ அல்லது வேண்டுமென்றே தானோ என்னவோ  இவர்களைt தேடி பாக்கிற்கு வந்தான் .
அங்கே அவர்கள் அமர்ந்திருந்த விதம்  ஒரு மாதிரியாக இருந்தது ,
அவர்களின் நெருக்கம் தெரபிஸ்ட் சொன்ன  தியரியை உறுதிப்படுத்தியது போல இருந்தது , மெதுவாக அருகே சென்று அவதானித்தான் .
பிரேமாவையும் சுதாவையும் ஆராய்ச்சி பண்ண வந்த ஜெயராஜூக்கு இவர்கள் பேசிகொண்ட விஷயம்  சற்று அதிர்ச்சியாக இருந்தது ,
சரியாக காதில் விழவில்லை இருந்தாலும்  குழப்பமாக இருந்தது ,
இறந்து போன பழைய வீட்டு டிரைவரை பற்றி பேசிகொண்டிருந்தார்கள் ,
 இப்போ அதைபற்றி ஏன் பேசுகிறார்கள் ?
அவர்கள் பேசுவது ஜாடை மாடையாக தான் காதில் விழுந்தது , அவனது நிம்மதி குலைந்தது,
பிரேமா  எதையும் சுதாவிடம் மறைக்காமல் சொல்லிகொண்டிருந்தாள்
சுதாவுக்கு அது ஒரு தற்கொலையாக இருக்க முடியாது என்று தோன்றியது , சில வேலை அவனை தற்கொலைக்கு இவன் தூண்டி இருக்கலாம் என்றும் நினைத்தாள். அவளுக்கு உண்மையிலேயே இப்போது பிரேமாவை பார்க்க பாவமாக இருந்தது , அவளின் சகல மன வியாதிக்கும் காரணம் புரிந்தது,
இனி அந்த flashback கில் இருந்து எப்படியாவது பிரேமாவை மீட்க வேண்டும் என்று தனக்கு தானே சொல்லி கொண்டாள் ,
புதிய குழப்பத்திற்கு விடை தேடி வந்த இடத்தில் தனது பழைய பைல் ஒன்று தூசி தட்டப்படுகிறதோ என்ற பயம் மெல்ல வர தொடங்கியது.
என்னதான் செய்ய முடியும் சுதாவை பிரித்தால் பிரேமாவை சமாளிக்க முடியாது , சேர்ந்திருந்தாலோ வேறு வினையே வேண்டாம்  குடும்ப மானம் என்றோ ஒரு நாள் கப்பல் ஏறத்தான் போகிறது ?
தன்தலையில் தானே அடித்து கொள்வதை தவிர வேறு choice ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை, என்றோ தான் செய்த தவறு தன்னை இன்றும் துரத்துகிறதே என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை ,

கருத்துகள் இல்லை: