
அந்த குடும்பத்துக்கு வந்தது சோதனை. அவர்கள் மீது ஒரு பெரிய திருட்டு பட்டம் வந்து விழுந்திருக்கிறது.
அந்த ஊரின் கோவில் நகை ஒன்று காணாமல் போய்விட்டது,
முதல் சந்தேகம் என்னவோ குரும்பாசியின் குடும்பத்தின் மீதே விழுந்தது , அது ஏன்?
உண்மையில் கோவிலுக்கும் அவர்களுக்கும் உள்ள தூரம் மிகவும் அதிகம்,
கோவிலுக்குள் செல்லகூடிய உரிமை கிடைத்து விட்டாலும் அவர்கள் அதை அவ்வளவாக உபயோகிப்பதில்லை.
சாமி மீது வெறுப்போ அல்லது வேறு காரணங்களோ தெரியாது ஆனால் அவர்கள் அந்த கோவிலுக்கு செல்வது மிகவும் குறைவு.
அப்படியாயின் அந்த கோவிலுடன் அதிக தொடர்புள்ளவர்களை அல்லவா சந்தேகப்படவேண்டும்?