செவ்வாய், 31 மார்ச், 2020

செய்வினை.. செயல்பாட்டு வினை

சுமார் அரை நூறாண்டுகளுக்கு முன்பு மக்கள் மந்திரம் பில்லி சூனியம் போன்ற விடயங்களில் அதீத நம்பிக்கை வைத்திருந்த காலம் அது.
 அதிலும் அந்த சுள்ளிபற்று கிராமமோ சொல்லும் தரமன்று  அன்றாட வாழ்க்கையில் நடக்கும் எந்த நிகழ்வுகளும் கிராமத்து சாமி பூஜை மந்திரம் பார்வை பார்த்தல் கழிப்பு கழித்தல் செய்வினை போன்ற வார்த்தைகளோடு பின்னி பிணைந்தே இருக்கும்.
இந்தனைக்கும் சுள்ளிபற்று கிராமத்தில் கல்வி அறிவுக்கு குறைவில்லை.   பலர் படித்து நல்ல உத்தியோகத்தில் இருந்தனர் . கிராமத்தின் பெரும்பாலான மக்கள் ஏனைய பிற  கிராமங்களையும் போலவே அனேகமாக உறவினர்களாகவே  இருந்தனர் .
அடிப்படையில் மிகவும் அமைதியான கிராமமாகவே இருந்தது.
கொஞ்ச நாட்களாக அந்த கிராமத்தின் அமைதியை சில  அசாதாரணமான சம்பவங்கள்  குலைத்து கொண்டிருந்தன,
அந்த கிராமத்திலேயே மிகவும் நல்லவர் என்று கூறப்படும் சுந்தரலிங்கம் வாத்தியின் வீட்டு விவகாரங்கள் முழு கிராமத்தின் தினசரி பேசு பொருளாகி இருந்தது,
ஏறைக்குறைய மூன்று மாதங்களாக வாத்தியின் வீட்டுக்கு யாரோ செய்வினை செய்து விட்டார்கள் என்று எல்லோரும் பேசிக்கொண்டார்கள்.
நடு இரவில் மிகவும் மோசமான சத்தங்கள் கேட்கும் .. சிலவேளைகளில் வீட்டு கூரை மேல் கற்கள் வந்து விழும் . வீடு முற்றத்தில் அதிகாலை வேளைகளில் அசுத்தமான பொருட்கள் சிதறி காணப்படும் .
வாத்தியும் குடும்பமும் நிலை குலைந்து போயினர்
நாட்டின் பல திக்குகளில் இருந்தும் ஏராளமான பேயோட்டிகள . செய்வினை தகடு எடுப்பவர்கள் என்று கூட்டி கொண்டுவந்து அவர்கள் மூலம் பேய்கள் செய்வினைக்கெல்லாம் முறையான கவுண்டர் அட்டாக் கொடுத்து கொண்டே இருந்தனர். ஆனாலும்  வாத்தி குடும்பத்தை இலக்கு வைத்த எதிரிகள் ஓய்வதாக இல்லை
புதிது புதிதாக செய்வினை அட்டாக்குகளை நெறிப்படுத்தி வாத்தி குடும்பத்தை துவம்சம் பண்ணிய வண்ணமே இருந்தனர்.
ஒரு கட்டத்தில் வாத்தி என்ன செய்வது என்ற மன உளைச்சலில் அவரது தூரத்து உறவினரான  போலீஸ் அதிகாரியான்  தம்பரின் காதில்   இந்த விடயத்தை போட்டார் .
ஏன் இவ்வளவு காலமாக என்னிடம் சொல்லவில்லை என்று  தம்பர்  கேட்டார்.
வாத்தி கொஞ்சம் தயக்கத்தோடு,..
 உங்களுக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை
 உங்களுக்கு சொல்லி ஒன்றும் பிரயோசனம் இல்லை என்று யோசித்தேன் என்றார்

வெள்ளி, 12 ஜூலை, 2019

குஞ்சு பணிக்கன் வளவு

குஞ்சு பணிக்கன் வளவில் மிளகாய் மூட்டைகள் எக்கச்சக்கமாக அடுக்கி
வைக்கப்பட்டிருந்தது . சென்ற வாரம் மலையாள வியாபாரிகள்  வண்டிகளில் கொண்டு வந்து இறக்கிவிட்டு போனார்கள்
வந்து சேர்ந்த மிளகாய் மூட்டைகளை குஞ்சு பணிக்கரும்  கூட்டாளிகளும் அளந்து பனை ஓலைகளால் சிறு சிறு பொதிகளாக   கட்டி கொண்டிருந்தனர்.
இந்த மிளகாய் மூட்டைகள் எல்லாம்  கொச்சியில் இருந்து வள்ளங்கள் மூலம் வந்தவையாகும் . இன்னும் இரண்டு மூன்று நாட்களில் வந்த வள்ளங்கள் வெற்றிலையையும் வைக்கோலையும் நிரப்பி அடுக்கி கொண்டு மீண்டும் மலையாள தேசத்துக்கு சென்று விடும்.
இந்த மிளகாய் வெற்றிலை வைக்கோல் மட்டுமல்லாது வேறு பல பொருட்களும் அங்கிருந்து வருவதும் இங்கிருந்து போவதும் பல ஆண்டுகளாக யாழ்ப்பாணத்தை  சுற்றி நடைபெறுவதுதான்.
சீனிவாச ரெட்டிதான் இந்த கிட்டங்கியின் உரிமையாளர். அவருக்கு குஞ்சு பணிக்கர் மீது அளவு கடந்த நம்பிக்கை, குஞ்சு பணிக்கர் சொல்வதே கணக்கு. அவர் கூறுவதை மறுவார்த்தை பேசாது சீனிவாச ரெட்டி ஏற்றுக்கொண்டு விடுவார். சிங்கள  வியாபாரிகளிடம் மிளகாயை கொடுத்து வெற்றிலையை கணக்கிட்டு வாங்கி கூலியாட்களை கொண்டு சரியான அளவுகளில் பொதி கட்டி ரெட்டியின் வள்ளத்தில் ஏற்றி விடுவதுவரை குஞ்சு பணிக்கர் பொறுப்புத்தான்.
இந்த் மலையாளதேச தீவுத்திடல் வியாபாரம் பல ஆண்டுகளாக நடந்து கொண்டு வருகிறது.
ரெட்டிக்கு சொந்தமான கிட்டங்கியே குஞ்சுபணிக்கன் வளவு என்றே பலருக்கும் தெரிகிறது . அந்த அளவு அதில் அவர் காலூன்றி இருந்தார்..

எல்லாம் சரியாக போய் கொண்டு இருந்தது.ஒரு நாள் வழக்கம் போல வரும் மிளகாய் மூட்டைகளோடு ஒரு உயிருள்ள மிளகாயும் வந்து சேர்ந்தது .அதன் பெயர் தேவநாயகி..
இடுக்கியில் ஏதோவொரு சிக்கலில் மாட்டுப்பட்டு தற்காலிகமாக தப்பி ஒடுவந்துள்ள பெண் என்று மட்டுமே குஞ்சு பணிக்கனுக்கு தெரியும். கொஞ்ச நாட்கள் பாதுகாப்பு கொடுக்கவும் என்று ரெட்டி ஓலை அனுப்பி இருந்தார்.
குஞ்சு பணிக்கனின் குடும்பத்தோடு தேவநாயகியும் இருப்பதில் அவர்களுக்கு ஒரு பிரச்சனையும் இருக்கவில்லை.
ஆனால் மெதுவாக தேவநாயகியின் கதையை தெரிந்த பின்பு குஞ்சு பணிக்கன் குடும்பத்தின் நிம்மதி போய்விட்டிருந்தது.

வெள்ளி, 14 செப்டம்பர், 2018

குளிர குளிர குளித்த பூசாரி

முழுநாட்டையும் புரட்டி போட்ட அந்த யுத்தம் கோவில் சாமிகளை மட்டும்
விட்டு விடுமா என்ன?
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை  தெரியும்  வயல்களுக்கு நடுவே   நிற்கும் வெள்ளம்புட்டி விநாயகர்  கோவில்.
 கோயிலை சுற்றி இருந்த மக்கள் கூட்டமோ கோயிலுக்கு ஏற்ற அளவில்  இல்லை .
உலகின் எல்லா திக்குகளிலும் இருந்த நாடுகளையும் நோக்கி அந்த வயல் கிராம மக்கள் ஓடிவிட்டிருந்தார்கள்.
எஞ்சி இருந்த பத்து பதினைந்து குடும்பங்களால்  மட்டுமே அந்த வெள்ளம்புட்டி கிராமம்  மக்கள் வாழும் ஊர்  என்ற அந்தஸ்த்தை  தக்கவைத்து கொண்டிருந்தது.  அவர்களின் ஒரே ஒரு பொழுது போக்கு இடமாக இருந்தார்  வெள்ளம்புட்டி  பிள்ளையார்.
அவருக்கு பூசை பண்ணுவதாக காலத்தை ஒட்டி கொண்டிருந்தார் சம்பு அய்யர்.
நடந்து கொண்டிருந்த உள் நாட்டு போர் திடீர் திருப்பமாக ஒரு வெளிநாட்டு போர் போன்று காட்சி அளிக்க தொடங்கியது .
ஒரே இரவில் இந்திய இராணுவம் அந்த வெள்ளம்புட்டியை சுற்றி வளைத்தது, மக்களுக்கு உடனடியாக எந்த ஆபத்தும் வரவில்லை. இரண்டு நாட்கள் ஆட்களை பதிவு செய்யும் வேலையை  இந்திய இராணுவம் செய்து முடித்தது. ஏராளமான கட்டுப்பாடுகளையும் பொது இடத்தில வைத்து அறிவித்தார்கள்.
ஒரு அசல் லாக் அப்பிற்குள் மாட்டிகொண்டு விட்டோம் என்று மக்களுக்கு  உறைத்தது !
உணவு உண்பதற்கு மட்டுமே மக்கள் வாயை திறக்க பழகி வெகு நாட்கள் ஆகிவிட்டதனால் அங்கு எந்த சத்தமும் பெரிதாக அல்ல சிறிதாக கூட எழவில்லை.

வெள்ளி, 16 ஜூன், 2017

வள்ளிகுட்டியை தேடி

அந்த சிறு கிராமத்தில்  ஒரு சில மாதங்களாக  அங்கும் இங்குமாக ஆடு மாடுகள் களவு
போய்கொண்டு இருந்தது.  எங்கோ யார் வீட்டு கால்நடைகள் களவு போவதை பேசிக்கொண்டிருந்தவர்களின் நிம்மதியை குலைத்தது ஆனந்தன் கொண்டு வந்த செய்தி.
வள்ளிகுட்டியைகாணவில்லை என்று அவன் கத்தினான். அவனை பொறுத்தவரை வள்ளிகுட்டி  ஒரு சாதாரண கன்று குட்டி அல்ல. அவனுக்கு மிகவும் நெருங்கிய ஒரு ஜீவராசி அது.
தந்தை இறந்து சிலவருடங்கள் ஆகிவிட்டிருந்தது.
தாயார் சிவகிரி  வேலாயுதத்தை  வாழ்க்கையில் சேர்த்துகொண்டார். அது ஆனந்தனின் நிம்மதியை தொலைத்து விட்டிருந்தது ..
வேலாயுதத்தின்  போக்கு ஆனந்தனுக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. அந்த ஆள் கிட்டவந்து உரசி உரசி பேசும்  விதம்  அவனுக்குள் சந்தேகத்தை விதைத்தது ..

அக்காவும் அண்ணாவும்  புத்தளத்துக்கு பொன்னையா  மாமாவோடு போய்விட்டார்கள் . அவர்கள் அங்கு உள்ள பள்ளிகூடத்தில் படிக்கிறார்கள். மாமாவுக்கு அங்கு பெரிய தென்னந்தோட்டம் இருக்கிறது.
ஆனந்தன் மட்டும் அம்மாவோடு ஒட்டி சுட்டானில் தங்கி விட்டான்.

புதிய அப்பாவின் மீது உள்ள  வெறுப்பினால்  தானும் புத்தளத்துக்கு  சென்று விடலாம் என்றுதான் எண்ணி கொண்டிருந்தான்.அடிக்கடி தாயை  தொந்தரவு செய்துகொண்டே இருந்தான்.
அவளுக்கும் வேலாயுதம் மீது பூரண நம்பிக்கை வரவில்லை . தான் அவசரப்பட்டு விட்டதாக எண்ணினாள். இனி என்ன செய்வது . மீதி காலத்தை ஒட்டி விடவேண்டியதுதான் வேற வழி?
ஏதோ விதம் விதமாக சிந்தித்து கொண்டிருந்தவளை திடுக்கிட வைத்தது ஆனந்தனின் குரல்

வியாழன், 15 ஜூன், 2017

ஆறுமுகத்தின் பழைய சைக்கிள்

சகிக்க முடியாத  கொடுமையான வெய்யில் நகரையே சுட்டு எரித்து கொண்டிருந்தது, வெயிலின் வெப்பத்துக்கும் சாலையின் தூசிக்கும் சவால் விட்டுக்கொண்டு ஆறுமுகத்தின்  பழைய சைக்கிள் பறந்து கொண்டிருந்தது.
யாழ் வைத்தியசாலைக்கு பின்புறமாக உள்ள  மின்சார நிலையவீதியின் திருப்பத்தில் அவனுக்கும் அந்த சைக்கிளுக்கும் ஒரு இடி காத்திருந்ததை அந்த வீதியில் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். வீதியின் கரையில் காத்திருந்த ஒரு சண்டியன்  எட்டி ஆறுமுகத்தின்  சேர்ட்டை இழுத்து பிடித்தான் . நிலை குலைந்த ஆறுமுகம்  தரையில் உருண்டு விழுந்தான் . அவன் கொண்டுவந்திருந்த தலையணை, துவாய், சோற்று பார்சல் எல்லாம் தரை மீது சிதறி எல்லா பக்கமும் சிதறி ஓடியது.  இரண்டாவது சண்டியன் சைக்கிளை தூக்கி நிலத்தில் குத்தி மிதித்தான்.
ஆஸ்பத்திரியில் உள்ள ஒரு நோயாளிக்கு கொண்டு செல்லும் உணவும் உடையும் அடிபட்டு விழுந்த அனாதைகள் போல காட்சி அளித்தது, இந்த காட்சியை பார்த்தவர்கள் திகைத்து போனார்கள். எவரும் முன்னே வந்து என்ன என்று கேட்கும் திறன் அற்று இருந்தனர். அந்த சண்டியர்களின் தோற்றமும் செயலும் அந்த தெருவையே பயமுறுத்தி விட்டிருந்தது, தங்கள் கடமை முடிந்தது என்பது போன்ற திருப்தியில் சண்டியர்கள் படு மோசமான வார்த்தைகளால் வசை பாடிக்கொண்டே அவ்விடத்தை விட்டுஅகன்றனர்.. வந்தார்கள் அடித்தார்கள் சென்றார்கள் . ஏன் எதற்கு என்று கேட்பதற்கு அங்கு யாருக்கும் துணிவு இருக்கவில்லை.

திங்கள், 1 மே, 2017

1 கோபுரம் கழுவப்போன தீவட்டிகள் ..- பாலாவோரை -

பாலாவோரை நகரத்தை சுற்றி உள்ள முப்பது கிராமத்திலும் இன்று மிகப்பெரும் கொண்ட்டாட்டம். கூட்டான் குலதிலகன் பேராவூரன் கட்டிய  பெருவரசு அய்யனார் கோவிலுக்கு இன்றுதான்  கோபுரம் கழுவல் பெருந்திருவிழா. கட்டிய கோபுரத்தில் உள்ள மண் தூசி போன்றவற்றை குடம் குடமாக நீரூற்றி கழுவதலை குடமுழுக்கு என்று பொதுவாக கூறுவார்கள்.  . முக்காலும் திரைகடலை அண்மித்த திராவிட தேசங்களின் கூட்டத்தில் பாலவோரை நகரம் அல்லது  பாலாவோரை என்று அறியப்பட்ட தேசம்  சுமார் முப்பது கிராமங்களையும் ஒரு சிறு நகரத்தையும் தன்னகத்தே கொண்டதாகும்

பேராவூரானின் தந்தை பெரியவரசுக்கு இரண்டே இரண்டு வாரிசுகள்.
முதலில் பிறந்தது பாக்கியத்தம்மாள் என்று செல்லமாக அழைக்கப்படும் கூட்டான் குலதிலகவதி பேராவூர் பாக்கியத்தம்மாள் என்பதாகும்.
தந்தை பெரியவரசுக்கு சோதிடத்தில் அபார நம்பிக்கை. சோதிடர்களின் ஆலோசனைக்கு ஏற்ப தனது பாலாவோரை நகரத்தை முற்று முழுதாக தனது மகன் கூட்டான் குலதிலகனுக்கு வாரிசுரிமையை பட்டயம் செய்து கொடுத்துவிட்டான்.

நகரத்தை மகனுக்கு கொடுத்து விட்டு இருபத்தொரு கிராமங்களை பாக்கியத்தமாளுக்கு பட்டயம் செய்து கொடுத்து விட்டான்.
அந்த கிராமங்களின் மிகப்பெரும் பிரச்சனை வறட்சியும் வெள்ளமும்தான். எந்த வித ஒழுங்கு முறையும் இன்றி சிலகாலம் வறட்சியும் சிலகாலம் பெரும் வெள்ளப் பெருக்குமாக பெரும் சோதனைகளையே வரலாறாக கொண்டிருந்தது .
செல்வ செழிப்பும் மக்கள் கூட்டமும் நிறைந்த நகரத்தையும் அதனோடு சேர்ந்த சில கிராமங்களையும் இளையவன் குலதிலகனுக்கு கொடுத்த பெரியவரசு ஏன்  மூத்தவளுக்கு  சதா இயற்கையோடு போராடவேண்டிய கிராமங்களை பட்டயம் செய்தார் என்பது பலருக்கும் பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

2 கோபுரம் கழுவப்போன தீவட்டிகள் - பாலாவோரை 2 ஆரம்பித்தது நிழல் நாடகம் !

வழுக்கியாறு குளம் கட்டும் ஆரம்ப முயற்சிகளை பாக்கியத்தம்மாள் சத்தம் போடாமல் தொடங்கினாள். வழக்கமாக செய்யப்படவேண்டிய ஆரம்ப விழாவோ அல்லது பூசாரிகளை கொண்டு செய்யப்படும் சடங்குகளோ இன்றி வேலையை ஆரம்பித்தாள். தந்தையார் பெரியவரசுவிடமும் தாயார் பேராட்டியிடமும் மட்டும் விளக்கமாக கூறி அனுமதியை பெற்றாள். வழுக்கியாறு குளம் கட்டும் முயற்சி தூர தேசங்களுக்கு  எட்டாமல் இருப்பது நல்லது என்று  அவர்கள் முடிவு செய்து இருந்தார்கள்.

ஏறக்குறைய ஐநூறில் இருந்து ஆயிரம் வரையிலான ஆண் பெண் பணியாளர்கள்  சேவையில்  ஈடுபடுத்தப்பட்டனர்.  பதினெட்டு மாதங்களில் வழுக்கியாறு கட்டுமான பணியில் பாதியளவை பாக்கியத்தமாளின்  நேர்மையான பணியாளர்கள் நிறைவேற்றினர். பாக்கியத்தம்மாளின் முயற்சி ஒருபுறம் என்றால் மறு புறத்தில் அவளது தம்பி  குலதிலகன் பிரமாண்டமான நேமிநாதர் கோவில்  கட்டும் திட்டத்தை முன்னெடுத்தான். 
பல ஊர்களில் இருந்து  புரோகிதர்களையும் உள்ளூர் பூசாரிகளையும் அழைத்து விரிவாக ஆய்வுகளை மேற்கொண்டு வந்தான்.
குலதிலகனை சுற்றி உள்ள அவனது மந்திரிகளும் இதர ஆலோசகர்களும் அவனது கோவில் ஆசையை மேலும் மேலும் தூண்டி கோவில்கட்டும் முயற்சிக்கு அத்திவாரம் இட்டனர். உரிய இடத்தை தெரிவு செய்து பெரியவரசுவையும் பேராட்டி அம்மாவையும் அழைத்து காட்டினான்.

3 கோபுரம் கழுவப்போன தீவட்டிகள் - பாலாவோரை - - யாகவேள்வியும் சோமபானமும்

பாலாவோரை புதிய அரசனாகிவிட்ட தம்பி குலதிலகனுக்கு கூடா நட்புகள்
ஏராளம் உண்டு. அவர்களின் கபட நோக்கங்களை அறியக்கூடிய ஆழ்ந்த அறிவு அவனிடம் இல்லை . கோவில் கட்டுமான ஆலோசனைகளை பற்றி அவனுக்கு ஆலோசனை கூறுபவர்கள் எல்லோருமே குலதிலகனின் மனம் எதை விரும்புகிறதோ அதையே தங்கள் ஆலோசனைகளாக வழங்கினர். அவர்களின் ஒரே நோக்கம் அரசனை குளிர்வித்து அவனிடம் இருந்து  காணிக்கைகளை பெறுவதுதான். .அவர்கள் ஒருவருக்கும் பாக்கியதம்மாளிடம் மட்டுமல்ல யாரிடமும் நல்ல பெயர் இல்லை.
எதிர்காலத்தில் பாக்கியத்தம்மாளின் கையோங்கி விட்டால் தங்களின் நாற்காலிகள் காலியாகிவிடும் என்பதை அவர்கள்  நன்கு உணர்ந்துள்ளனர்.  நாட்டின் பெரும் பகுதி செல்வம் வழுக்கியாற்று குளம் கட்டுவதற்கே பயன்பட்டால் அது பாக்கியத்தமாளின் செல்வாக்கை உயர்த்திவிடும் என்று பயந்தார்கள்.  அது நடந்து விடக்கூடாது என்பதற்காகவே நேமிநாதர் கோவில் ஆசையை அவனின் உள்ளத்தில் விதைத்து விட்டிருந்தனர். அவர்களின் வஞ்சக நோக்கம் ஓரளவு  நிறைவேறி கொண்டு இருந்தது.

இந்த  வஞ்சகர்கள் குலதிலகனை முன்னே நிறுத்தி அவனுக்கு பின்னால் இருந்து கொண்டு பாக்கியதம்மாளுக்கு எதிரான வியூகங்களை வகுத்து முன்னேறி வருவதை பாக்கியத்தமாள் உணர்ந்தே இருந்தாள்.

ஆனால் அதை எப்படி தடுத்து நிறுத்துவது  என்று அவள் பலவாறாக சிந்தித்தாள். தனக்கு மிகவும் நம்பிக்கையான அமைச்சர்கள்  அறிஞர்கள் போன்றோரிடம் மீண்டும் மீண்டும் கலந்து ஆலோசித்து மெதுவாக தனது  வியூகங்களை வகுக்கலானாள்.

4 கோபுரம் கழுவப்போன தீவட்டிகள் - பாலாவோரை .. 4 - பாகம் - பார்பனர்கள் புலாலை தவிர்க்க தொடங்கினர்....

சமண பள்ளிகள் பார்பன கோவில்கள் ஆக மாறத்தொடங்கியது 
பேராவூர் பெரியவரசுவின் வாரிசு குலதிகலனுக்கு மிகவும் நெருங்கிய ஆலோசகர்களாக பல புதிய பார்ப்பனர்கள் அரண்மனைக்கு உள்ளே நுழையத் தொடங்கினார்கள். .  மாலைநேரங்களில் அழகான பார்பன பெண்களின் ஆடல் பாடல்கள் அவனது அரண்மனையில் அரங்கேற தொடங்கின. அவர்களின் கவர்ச்சியில் ஓரளவு மயங்கி சொந்த புத்தியை இழந்து அவர்களின் வாழ்க்கை முறையையே பெரிதும் பின்பற்ற தொடங்கினான்.
பார்பனர்கள் ஆலோசனைப்படி சமண பள்ளிகளை மெதுவாக பார்பன கோவில்களாக மாற்ற முயற்சிகளை மேற்கொள்ளலானான்.
சமணப்பள்ளிகள் மக்களுக்கு கல்வி போதித்து கொண்டிருந்தன .எனவே அவற்றை இலகுவில் கோவில்களாக மாற்றுவதில் ஏராளமான சிக்கல்கள் இருந்தன. மக்கள் பொதுவாக அறிவில் சிறந்தவர்களாகவும் ஓரளவு நேர்மையான குணத்துடனும் இருந்தார்கள்.
பார்பன வேள்விகளில்  வெட்டப்படும் ஆடு மாடுகளின் குருதி ஆறாக ஓடியது.  நெருப்பில் வாட்டி கொடுக்கப்படும் ஆகுதியின் சுவையில் மக்களில் பெரும் பாலோர் மயங்கி போனார்கள். அது போதாதென்று ஈற்றில் வழங்கப்படும்  சோமபானத்தின் போதையிலும் மக்கள்  தங்கள் சுய நினைவுகளை இழந்தார்கள்.  எப்பொழுதும் பார்பனர்கள் பல காம இச்சைகளை தூண்டும் ஓவியங்களையும் கதைகளையும் தாராளமாக வாரி வாரி வழங்கினார்கள். எப்படி குலதிலகனை மயக்கினார்களோ அதே போன்று  பொதுமக்களையும் மயக்க முயற்சித்தார்கள். அதில் கணிசமான வெற்றியும் கண்டார்கள்.
அவர்கள் கூறும் ஏராளமான புராண கதைகள் பெரும்பாலும் காம கிளர்ச்சி ஊட்டும் கதைகளாகவே இருந்தன. அவற்றை எல்லாம்  உருவாக போகும் கோவிலில் சித்திரங்களாகவும் சிற்பங்களாகவும் வடிக்க வேண்டும் என்று குலதிலகன் வேண்டி கொண்டான். அப்பொழுதானே  பிற தேசத்தவர்களும் கோவிலை பார்க்க வருவார்கள்,வருமானமும் பெருகும்.    

.5 கோபுரம் கழுவப்போன தீவட்டிகள் - பாலாவோரை - 5 மெல்லிய மேகங்கள் இடியும் மின்னலுமாய் ..

வழுக்கியாற்று கரையில்  பெரிய கொட்டகைகள் அமைக்கப்பட்டன.
அங்குதான் மண்வெட்டி போன்ற கட்டுமான கருவிகள் வைக்கப்பட்டிருந்தன. சில கொட்டகைகளில் குளகட்டுமானத்தில் தேர்ச்சி பெற்ற விற்பனர்களும் . வேறு சில கொட்டகைகளில் பணியாளர்களும் தங்க வைக்கப்பட்டிருந்தனர். உணவு பானம் தயாரிப்பதற்கு தனியாக நான்கு கொட்டகைகள் இருந்தன.
இவற்றிக்கு நடுவில் பாக்கியத்தமாளின் கொட்டகையும் இருந்தது.
வெகு வேகமான கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருந்தன. எண்ணியபடி குளம் கட்டி முடிப்பதற்குள் ஏராளமான தடங்கல்கள் வந்து கொண்டே இருந்ததால் பாக்கியத்தமாள் நிம்மதி இழந்து காணப்பட்டாள்.

குலதிலகனும் அவனது புதிய நண்பர்களாகி விட்ட  பார்பன பூசாரிக்களும் செய்யும் முன்னுக்கு பின் முரணான கூத்துகள் மக்களிடம் பெரும்
விவாதங்களை உண்டாக்கி இருந்தது. மக்களில் பலருக்கும் அவர்களின் பல சம்பிரதாயங்கள் வேடிக்கையாகவும் கொஞ்சம் கவர்ச்சியாகவும் இருந்தது.முதலில் அவர்களது வர்ண அலங்கார ஆடைகள் மற்றும் வர்ணப்பூச்சுக்கள் சிறுவர்களை மட்டுமல்ல பெரியவர்களையும் மகிழ்வித்தது.  அவர்களின் உணவு முற்று முழுதாக பாலாவோரை மக்களின் பாரம்பரிய உணவுகளிலும் பார்க்க பெரிதும் மாறுபட்டு இருந்தது. எல்லாவற்றிலும் பார்க்க சதா ஆடல் பாடல் போன்ற கொண்டாட்டங்கள் அவர்களை சுற்றியே இருந்தது. அவர்கள் கூடும் இடமெல்லாம் குலதிலகனின் அரண்மனை பணியாட்கள் சிற்றுண்டிகளை வழங்கினர்.


எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தது போல அவர்களின் புதிய பசுநேசன் வேஷம் மக்களை பெரிதும் கவர்ந்தது. ஏராளமான பசுக்களை நீராட்டி அலங்கரித்து வர்ணபொடிகளை பூசி அவற்றை தேவதை போல பூசித்தனர். இயல்பிலேயே  கொல்லா நோன்பை கடைப்பிடித்த பாலாவோரை சமண மக்களுக்கு பார்ப்பனர்களின் பசு நேசம் உள்ளத்தை தொட்டது. மெல்ல மெல்ல சமணர்களின் மனதில் பார்பனீயம் இடம் பிடிக்க தொடங்கியது. பார்பனர்களின்  கோமாதா பூசைக்கு மக்கள் தங்களது பசுக்களை ஒட்டிக்கொண்டு வரலாயினர்.

6 கோபுரம் கழுவப்போன தீவட்டிகள் - பாலாவோரை -6 (நிமித்தகாரியின் வேட்டைக்களம் )

பாலாவோரை  குலதிலகன் தற்போதெல்லாம் ஆட்சி நிர்வாகத்தை விட
கோவில் கட்டுமான விடயங்களிலேயே அதிக நேரத்தையும் பொருளையும் விரயம் செய்தான். பார்பன பூசாரிகளின் வேதமந்திர தந்திரங்களால் தனக்கு மாபெரும் புகழும் செல்வமும் வந்து விடும் என்ற கனவில் மிதந்தான். அவனது நண்பர்களும் மதியாலோசகர்களும் அரசவளங்களை சுரண்டி கொண்டிருந்தார்கள். மெல்ல மெல்ல அவனது நிர்வாக தீர்மானங்களில் பூசாரிகள் மட்டுமல்லாது  அழகி மேனகை பிராட்டியாரும் தங்கள் செல்வாக்கை உபயோகிக்க தொடங்கினார்கள். மொத்தத்தில் பாலாவோரை என்ற தேசம் அந்நியர்களின் கைகளுக்குள் வழுக்கி விழுந்து கொண்டிருந்தது.
இந்த சம்பவங்கள் முழுவதும் அக்கா பாக்கியத்தமாளுக்கு உடனுக்கு உடன் தெரிந்து கொண்டே இருந்தது.

இவ்வரச குடும்பத்தின் நெருங்கிய ஆலோசகர்கள் பட்டியலில் ஒரு காட்டு
வாசி குடும்பமும் இடம்பெற்று இருந்தது. அவர்கள் அரண்மனைக்கு வருவதும் போவதும் ஒருவித மறை பொருளாகவே  இருந்து வந்துள்ளது.
அவர்கள் பல ஊர்களுக்கும் செல்பவர்கள் பலவிதமான தொழில்களும் செய்பவர்கள். அவர்களுக்கு நிமித்தகாரர்கள் என்ற ஒரு பெயரும் உண்டு, 
பாக்கியத்தம்மாள் அந்த குடும்பத்தின் இளைய பெண் அம்மணி  மீது பெருமதிப்பு வைத்திருந்தாள் .
அந்த பெண் ஒரு அற்புதமான நிமித்த அறிவு படைத்தவள் என்று அரச குடும்பத்தால் போற்ற படுபவள். அவளை எப்படியாவது தேடி கண்டு பிடித்து கூட்டி வருமாறு தூதர்களை ஏவினாள்.

7 கோபுரம் கழுவப்போன தீவட்டிகள் - .பாலாவோரை- 7 ம் பாகம் .. (வீசும் காற்றிலும் போரின் வாடை).

பாக்கியத்தம்மாள் தங்களை தேடி வந்ததில் பெருமகிழ்ச்சி கொண்ட
குலசேகரன் பரிவாரம் விழுந்து விழுந்து உபசரித்தது. தங்களின் விருப்பங்களை வேண்டுதல்களை எல்லாம் மிகுந்த நம்பிக்கையோடு பாக்கியத்தம்மாளிடம் கூறினார்கள்.
அவர்களை பற்றிய முழு விபரமும் அவளுக்கு தேவையாக இருந்தது .
தனது அடுத்த நகர்வுக்கு அது  பெரும் உதவி செய்யும் என்றெண்ணினாள். அதனால்தான் இந்த நல்லெண்ண வரவை அவள் மேற்கொண்டிருந்தாள். அவளின் ஆழமான நோக்கத்தை தம்பி எள்ளளவும் சந்தேகப்படவில்லை. பார்பனர்களும் இதர பரிவாரங்களும் முற்று முழுதாக பாக்கியத்தம்மாளை நம்பினார்களோ என்னவோ தெரியவில்லை. ஆனால் அவர்களுக்கு வேறு மார்க்கமும் இருக்கவில்லை. அக்காவும் தம்பியும் திடீரென்று அன்பு பரிமாறி கொண்டிருப்பது அவர்கள் இதுவரை காணாத காட்சியாகும். தம்பியை போல அக்கா ஒரு வெகுளி அல்ல என்பது  மட்டும் அவர்களுக்கு புரிந்தது.
தாங்கள் என்ன சொன்னாலும் தலையாட்டி கேட்டுகொண்டிருப்பான் குலசேகரன். ஆனால் அக்காவோ அப்படி அல்ல. குறுக்கு கேள்விகள் கேட்டு திணறடித்து கொண்டிருந்தாள். அங்கே வீசிய காற்றில் குதிரை சாணத்தின் மனமும் கலந்திருந்தது. அதில் ஒரு போரின் வாடையும்  வீசியதை ஏனோ பலரும் கவனிக்க தவறி விட்டார்கள்.

அக்காவும் தம்பியும் மிகவும் ஒற்றுமையாக இருந்தால் தாங்கள் நினைப்பது நடக்காதே என்ற அவநம்பிக்கையும் ஏற்பட தொடங்கியது. அவர்களின் மன ஓட்டத்தை உணர்ந்து கொண்ட பாக்கியத்தமாள் அவர்களை பகைத்து கொள்வது நல்லதல்ல என்று எண்ணியவளாக அவர்களின் அறிவு கூர்மையையும் மந்திர மேன்மைகளையும் பலவாறாக புகழ்ந்து அவர்களை குளிர்வித்தாள். மேலும் தனது வழுக்கியாற்று குளக்கட்டுமான கூடாரத்துக்கு அவர்கள் வருகை தந்து பூஜைகள் புரியவேண்டும் என்றும் வேண்டி கொண்டாள். மிகுந்த மன மகிழ்வுடன் அவர்கள் எப்பொழுது அழைத்தாலும் வந்து பூஜைகள் மேற்கொண்டு தெய்வ ஆசீர்வாதங்களை பெற்று தருவதாக வாக்கு கொடுத்தனர்.

8 கோபுரம் கழுவப்போன தீவட்டிகள் - பாலாவோரை - பாகம் 8 ... மேடை போட்டு நாடகம் ஆரம்பம் -பாலாவோரை 8)

 பாலாவோரை நகரத்திலும் பாக்கியத்தமாளின் வழுக்கியாற்று தேசத்திலும் அரச  நிர்வாக  பணிகள் மிகவும்  அமைதியாக நடைபெற்று கொண்டிருந்தது.
குலதிலகனின் பரிவாரங்கள் வேகவேகமாக தங்கள்  திட்டங்களை நிறைவேற்றி கொண்டிருந்தனர்.
கோவில் கட்டுமான பணிகளுக்கு என புதிதாக வேற்று மொழிகள் பேசும் பணியாட்களும் சிற்பிகளும் வேற்று மதவாதிகளுமாக  நகரே ஒரு வித விழாக்கோலம் கொண்டது போல ஆயிற்று.
மாலைவேளைகளில் ஆடல் பாடல் வினோத நிகழ்சிகளை நகரின் புதியவரவான பார்ப்பனர்கள் அரங்கேற்றிய வண்ணம் இருந்தனர். அவர்களின் வரவு மக்களுக்கு பலவிதமான பொழுது போக்குகளை அளித்தது.குலதிலகனை மகிழ்விக்க அவர்கள் நடத்தும் நாடகங்கள் குடியானவர்களை பெரிதும் கவர்ந்தது .
கற்றறிந்தோர் மத்தியில் அந்த அந்நியர்களின் வரவு மெதுவாக  கவலையை அளித்தது .அவர்களின் நோக்கங்கள் பற்றிய சந்தேகங்கள் எழுவதற்கு பல காரணிகள் இருந்தன.
குறிப்பாக நேமிநாதர் பள்ளியை நேமிநாதர் கோவில் என அரசனும் பரிவாரங்களும் அழைக்க தொடங்கிய போதே வேண்டாத விளைவுகள் துளிர் விடதொடங்கியது. சமண கோட்பாடுகள் மீது அவர்களுக்கு நம்பிக்கை இருக்கவில்லை. அதிலும் அவர்கள் தமிழை புறக்கணிக்க தொடங்கியதும் தங்கள் அந்நிய மொழிகளை அடிகடி சிலாகித்து பேசுவதும் அறிஞர் குழாமில் கவலையை தோற்றுவித்தது. அதிலும் அரசன் குலதிலகன் அந்நியர்களுக்கு ஏராளமான சலுகைகளை கொடுப்பதுவும் மக்களின் முணுமுணுப்புக்கு உந்துதலாகியது. 

தம்பி குலதிலகனின் பூரண நம்பிக்கையை பெற்ற அக்கா பாக்கியத்தமாள் மெதுவாக  தனது திட்டங்களை செயல்படுத்த தொடங்கினாள்.

9 கோபுரம் கழுவப்போன தீவட்டிகள் - பாலாவோரை - 9.... ஒவ்வொரு தேசங்களாக விழுந்து .

(சமணர்களின் ஆதிபகவன் என்று அழைக்கப்படும் முதலாவது தீர்த்தங்காரர் மாகாவீரர் சிலை)
பாலவோரை வேந்தன் தலைகால் புரியாமல் மகிழ்ச்சியில் குதித்தான்.
பாக்கியத்தம்மாளின் தூதுவன் கொண்டுவந்த செய்தி அவ்வளவு இனிப்பானது. கட்டப்படும் நேமிநாதர் பள்ளிக்கு அல்ல அல்ல கோவிலுக்கு காவல் கோவிலாக வழுக்கியாற்றங்கரையில் ஒரு காவல் கோவில் அமைப்பதற்கு தீர்மானித்து இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அது மட்டுமல்ல குலதிலகனின் பார்ப்பன பரிவாரங்களின் உதவியையும் அதற்காக  கோரி இருந்தாள்.
அவனது மனம் தாறுமாறாக கணக்கு போடத்தொடங்கியது . அப்படியே இரண்டு கோவில் கட்டுமானத்தையும் ஒரே நேரத்தில் ஒரே ஆள் அம்பு சேனைகளையும் பயன்படுத்தி கட்டினால் ஏராளமான அனுகூலங்கள் தனக்கு இருப்பதாக எண்ணி கொண்டான். தனது பரிவாரங்களையும் கூட்டி கொண்டு அக்காவை சந்திக்க தூதனுப்பினாள்.
நடக்கும் காரியங்கள் எல்லாம் நம்புவதற்கு கொஞ்சம் கடினமாக இருப்பதாக ஒரு சில பார்ப்பன மேதாவிகள் சந்தேகம் தெரிவித்தனர். அவர்களை குலதிலகன் கடுமையாக கண்டித்தான். தனது அக்கா தன்மீது கொண்ட அன்பினால்தான் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக அவன் முற்று முழுதாக நம்பினான்.,

அவனது நம்பிக்கை சந்தேகித்து கேள்வி கேட்கும் தைரியம் அங்கு யாருக்கும் இருக்கவில்லை. இருந்தாலும் ஏனோ சிலருக்கு நடப்பது ஒன்றுமே தெளிவில்லாமல்  ஏதோவொரு குழப்ப நிலையை அடைவது போல  தோன்றியது .
அங்கு நிலவிய மகிழ்ச்சி கேளிக்கையில்  திளைத்து பலரும்  சோமபானம் அருந்தி ,பலவகையான பதார்த்தங்களை உண்டு களித்திருந்தனர்.

10 கோபுரம் கழுவப்போன தீவட்டிகள் - பாலாவோரை -10 புத்தூர் நம்பியின் வரவு

பாக்கியத்தம்மாளும் அவளது ஆலோசகர்களும் என்னதான் நுணுக்கமாக
திட்டங்கள் தீட்டி பாலவோரை தேசத்தை காக்க திடசங்கற்பம் பூண்டு இருந்தாலும் அது அவ்வளவு இலகுவானதல்லவே?
தேசத்தை காப்பாற்ற தம்பியை பணயம் வைக்கவேண்டி இருக்கிறதே என்ற எண்ணம் அவளை கொஞ்சம் கூட தூங்க அனுமதிக்கவில்லை.
தாயும் தந்தையும் இறந்து சில ஆண்டுகள் ஆனாலும்  அவளின் மனதளவில்  அவர்கள்  இன்னும் உயிரோடுதான்  இருக்கிறார்கள் . சஞ்சலம் வரும்போதெல்லாம் மனதில் அவர்களிடமே கேள்விகளை கேட்டு பதில்களையும்  பெறுவதாக அவள் அடிக்கடி கூறுவாள். அது எவ்வளதூரம் உண்மை என்பது எவருக்கும் தெரியவில்லை.

பகலும் இரவும் பொருதிக்கொள்ளும் பொல்லாத மாலை 

எதிரே நிற்பது தனது ஒரே தம்பி , அதுவும் தாய் தந்தை இல்லாது  தான் ஒருத்தி மட்டுமே உறவாக இருக்கும் அவனே  தனது பகைவனாகவும் வந்து விடுவானோ என்ற பயம் கலக்கம் எல்லாம் சேர்ந்து சோர்வை தந்தது.
வீசும் பூங்காற்றும் கூட மிகவும் பாரமாக தெரிந்தது அழகான மாலைபோழுதுகூட ஒரு பகலும் இரவும் பொருதிகொள்ளும் ஒரு கொடிய மாலை பொழுதாக தோன்றியது.

ஒரு கணம் அவளின் மனதில் "கறையான் புற்றெடுக்க கரு  நாகம் குடிகொள்வதா" என்று யாரோ ஓங்கி முழங்கியது போல இருந்தது.  புற்றெடுக்க நாகம் .. புற்றெடுக்க .. புற்றெடுக்க என்று மனதில் வார்த்தைகள் தானாகவே வந்து கொண்டே இருந்தது.
புற்றுவெட்டு பூதூர் நம்பி ... ஒரு மின்னல் பளிச்சிட்டது போல் புத்துவெட்டு பூதூர் நம்பியின் ஞாபகம் தோன்றியது. வழி தோன்றியது போல ஒரு உணர்வும் தோன்றியது.
புற்று வெட்டு பூதூர் நம்பி பாலாவோரை அரச குடும்பத்தின் மிகவும் விசுவாசமான ஒரு ஊழியனின் மகனாவான்.

11 கோபுரம் கழுவப்போன தீவட்டிகள் - பாலாவோரை - பாகம் 11 ( புத்திமான் பலவான் ?)

புத்துவெட்டூர் நம்பி படுவேகமாக தனது நம்பிக்கைக்கு உரியவர்களை
அழைத்து  ஒரு ஆலோசனை குழுவை அமைத்தான். பேராவூருக்கும் பாலவோரைக்கும்   ஏற்படவிருக்கும்  ஆபத்து பற்றி விளக்கமாக எடுத்துரைத்தான். ஏற்கனவே பாக்கியத்தம்மாளால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை பற்றி விளக்கினான்:
பாக்கியத்தமாளின் புத்திசாலித்தனதால் தாங்கள் எதிரி என்று கருதக்கூடிய குலதிலகனின் நம்பிக்கையை பெற்று விட்டோம், அத்தோடு .பார்ப்பனர்களின் அசைவுகள் அத்தனையும் தங்கள் பார்வையிலேயே நடைபெறுகின்றன என்றும் புத்தூர் நம்பி கூறினான் .

மௌன  யுத்தம் ஆரம்பம்

முதல் கட்ட நகர்வில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். அடுத்த அடுத்த கட்டங்களில் நாம் படிப்படியாக வெற்றி பெறவேண்டும்.வெற்றி பெறத்தவறினால் பாலவோரை பார்ப்பனவோரையாக மாறிவிடும்.
வரலாறு எம்மீது சுமத்தி உள்ள இந்த கடமையை செவ்வனே நிறைவேற்ற உங்கள் உதவியை பாலவோரை நாடி நிற்கிறது என்று கேட்டு கொண்டான்.
மேலும் அவன் கூறுகையில் , நாம் ஒருபோதும் குலதிலகனையோ அவனது  அமைச்சர்களையோ நிர்வாகிகளையோ அல்லது பார்பனர்களையோ பகைத்துகொள்ள கூடாது. நாம் அவர்கள் மீது தொடுத்திருக்கும் யுத்தம் ஒருவகையான மௌன யுத்தம் என்பதை மறந்துவிடாதீர்கள் என்று மிகவும் அழுத்தமாக தெளிவாக கூறினான்.

12 கோபுரம் கழுவப்போன தீவட்டிகள் - பாலாவோரை -12 - (திராவிட தேசங்களை வெற்றி கொண்ட செருக்கு )

வழுக்கியாற்றை வேடிக்கை பார்க்க போய் புத்தூர் நம்பியிடம் பிடிபட்ட பார்பனர்கள் பற்றிய செய்திகள் எதுவும் வெளி உலகிற்கு தெரியவில்லை.
ஒரு மாளிகையில் கைதிகளாக ஆனால் போதிய வசதிகளோடு தடுத்து வைக்கப்பட்டார்கள். இனி தொடர்ந்து பிடிபடப்போகும் பார்பனர்களுக்கும் சேர்த்து பெரிய அளவில் சில  கரந்துறை காப்பகங்கள் பாக்கியத்தம்மாளின் ஆலோசனைப்படி புத்தூர் நம்பியால் நேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்தது. பாலாவோரை மக்களை ஆழம்  பார்க்கவென  கிளம்பிய பல பார்ப்பனர்கள் திடீர் திடீர் என்று காணமல் போவது குலதிலகனுக்கு திகைப்பை அளித்தது. அவனின் அமைச்சர் பெருமக்களோ  பார்ப்பனர்களின் பெண்கள் சகவாசம் மதுபோதை பழக்கம் காரணமாக எங்காவது உல்லாசமாக இருக்க கூடும் என எண்ணினார்கள். குலதிலகனும் ஓரளவு அப்படியே நம்பினான்.
நாட்கள் செல்ல செல்ல குலதிலகன் முற்று முழுதாகவே தனது சுய நிலையை இழந்து கொண்டே வந்தான்.
நேமிநாதர் கோவில் வேலைப்பழுவையும் மெதுவாக அக்கா பாகியத்தம்மாளின் வழுக்கியாற்று குலக்கட்டுமான பணிகளோடு சேர்த்து விட்டதனால் தனது நேரமும் சக்தியும் வீணாகாமல் இருப்பதாக எண்ணி தன்னை தானே புகழ்ந்து கொள்ளும் மனோநிலையில் இருந்தான்.
அவன் எந்த நேரமும் சுய நினைவு பெற்று விடகூடாது என்பதற்காக  பார்ப்பன அழகிகளும் புரோகித  பெருச்சாளிகளும் பெரும் கவனம் எடுத்து வேடிக்கை வினோதங்கள் களியாட்டங்கள் சோமபானம் இரகசிய யாகவேள்வி போன்றவற்றை வழங்கி கொண்டே இருந்தனர்.

13 கோபுரம் கழுவப்போன தீவட்டிகள் - பாலாவோரை -13 -- தன் கை கொண்டே தன் கண்ணை மூடிய அரசர்கள் !

புத்தூர் நம்பியின் முகாமில்  ஏராளமான பணியாளர்கள்  போர்கருவிகள்  தயாரிப்பில்  முழுவீச்சுடன்  ஈடுபட்டு கொண்டிருந்தனர். போர் கருவிகளின் அவசிய தேவை  தற்போது இருப்பதாக நம்பியோ பாக்கியத்தம்மாளோ  கருதவில்லை.
ஆனால்  எதிர்கால அரசியல் சூழ்நிலைகள்  எந்த திசையில் செல்லும் என்பதை எவராலும்  எதிர்கூற முடியவில்லை. தற்போது பார்ப்பன சமய மேலாதிக்கம் அயலில் உள்ள பல தேசங்களிலும் பரவி வருகிறதே?
எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது.
அமைதியான பாலாவோரை ஒரு பலமான தேசமாக இருக்கவேண்டிய வரலாற்று நிர்பந்தம்  சுமத்த பட்டு விட்டது.
 பாலாவோரை மக்களோ அல்லது அறிஞர் பெருமக்களோ ஒருபோதும் ஒரு யுத்தத்திற்கு தயாராக இல்லை . ஆனால் நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் அவர்களை ஒரு மோதலுக்கு தயார் படுத்துவது போல்தான் நடந்து கொண்டிருந்தன.
மேலும் குலதிலகன் எப்படி அவர்களின்மயக்கு வலையில் வீழ்ந்தானோ அதே போன்று அயலில் உள்ள அரசர்களும் அரசுகளும் வடவர்களிடம் வீழ்ந்து கொண்டிருக்கும் வேதனை செய்திகள் பாலவோரையின் தூக்கத்தை தொலைத்து விட்டிருந்தது?

14 கோபுரம் கழுவப்போன தீவட்டிகள் - பாலாவோரை -14 ( எல்லை கிராமங்கள்... கைமாறும் பட்டயம் )

பாலாவோரையின் எல்லை கிராமங்களில் வழுக்கியாற்று பணிகள் நடைபெற்று  கொண்டிருந்தன. வழுக்கியாறு சீரமைக்கப்பட்டதும் வயல்களுக்கு நீர் வரத்து அதிகமாக இருக்கும். பல ஆண்டுகளாக கவனிப்பாரற்று போனதால் பல வாய்க்கால்கள் உருத்தெரியாமல் அழிந்து போயிருந்தன. அவற்றை செப்பனிட வேண்டிய தேவை இருந்தது.
ஏற்கனவே பலதடவை குலதிலகனின் அரசவைக்கு முறையிட்டும் அரசபி  அவனது அமைச்சர்களோ எதுவித உருப்படியான பணிகளுக்கும் செவி சாய்க்கவில்லை.
இறுதியில்  அங்கு வசிக்கும் குடிமக்கள் பாலாவோரை பணிமனைக்கு வந்து தங்கள் வேண்டுகோளை தெரிவித்து இருந்தனர்.
அவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்த பாக்கியத்தம்மாள் அவற்றை செப்பனிட பாலாவோரை அரசின் அனுமதியை பெறவேண்டியது அவசியம் என்று தெரிவித்தாள்.
அவர்களை குலதிலகனின் அரண்மனைக்கு சென்று அதற்குரிய அனுமதி பட்டயத்தை வாங்கிவருமாறு கேட்டு கொண்டாள்.
எல்லையோர குடிமக்கள் தன்னை நாடி வருவார்கள் என்பது ஏற்கனவே பாக்கியத்தம்மாள் எதிர்பார்த்ததுதான்.
எல்லையோர கிராமத்து வாய்க்கால் பணிகள் ஆரம்பிக்கும்போது குலதிலகனுக்கு எள்ளளவு சந்தேகமும் வராதவாறு அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பலபடுத்தி விடவேண்டும் என பலநாட்களுக்கு முன்பே வழுக்கியாற்று நிர்வாகிகள் முடிவு செய்திருந்தனர்.
பணிகள் செய்வதற்கு உரிய அனுமதி பட்டயம் கிடைத்ததும் மின்னல் வேகத்தில் செயல்படவேண்டிய தேவை இருந்தது.
குலதிலகனை நோக்கி சென்ற குடியானவர்கள் பட்டயத்தை வாங்கி கொண்டு வர வேண்டுமே?

15 கோபுரம் கழுவப்போன தீவட்டிகள் - பாலாவோரை - 15 ( பெரு மழை கட்டியம் கூறிய போர் மழை )

புத்தூர் நம்பியின் அதீத அறிவிலும் ஆற்றலிலும் அளவுக்கு அதிகமான நம்பிக்கை  வைத்திருப்பது சரியானதா என்று  சிலவேளைகளில் அக்கையர் எண்ணுவது உண்டு.  அதற்கு காரணமும் இருந்தது.
காணமல்  போன பார்ப்பனர்களின் விபரங்களை தேடி அயல் தேசத்து  ஒற்றர்கள் உலாவ தொடங்கினர்.
இச்செய்தி அக்கையர் செவியில் எட்டியது. அயல்தேசங்கள் பார்ப்பனர்களின் விடயத்தில் அக்கறை காட்டுவது தங்கள் திட்டங்களை மேலும் சிக்கலாகும் என்ற கவலை அவளுக்கு உண்டாயிற்று.

 நம்பியின் திட்டப்படி எல்லைப்புற  கிராமங்களின் வாய்க்கால் சீரமைப்பு பணிகள் புயல் போல வேகமாக நடைபெற்று  கொண்டிருந்தன. அங்கு என்ன நடக்கிறது என்று யாரும் சிந்திக்கும் முன்பாகவே  களப்பணிகள் நிறை வேறி கொண்டிருந்தன.
இடையிடையே அங்கு வருகை தந்த  குலதிலகன் நடைபெறும்  பணிகளை பார்த்து  மகிழ்ச்சியும் திருப்தியும் கொண்டு அக்கையார் பாக்கியத்தம்மாளை ஒரே அடியாக புகழ்ந்த வண்ணமே இருந்தான்.
கூடவே வரும் பார்ப்பனர்கள் தங்கள் சந்தேகங்களை வெளியே காட்டி கொள்ள பயந்தார்கள். அவர்கள் வாய்க்கால் கட்டுமானங்களை உற்று உற்று நோக்கி கண்களால் அளவெடுத்தார்கள்.  ஈற்றில் சிந்தித்து சிந்தித்து எதுவித முடிவுக்கும் வரமுடியாமல் திணறிய வண்ணம் நம்பியின் விருந்தோம்பலை புகழ்ந்து விட்டு செல்லலாயினர்.

16 கோபுரம் கழுவப்போன தீவட்டிகள் - பாலாவோரை - 16 . கண்ணீருக்கு கவசம் போட்ட மழைநீர் c

நடக்கும் சம்பவங்களை பார்க்கும் போது குலதிலகன் மெதுவாக தனிமை
படுத்தப்படுவதாக மேனகா பிராட்டிக்கு தோன்றியது. அவன் மிக வேகமாக தோற்று கொண்டிருக்கிறான் என்று அவளுக்கு தோன்றியது.  எதுவிதத்திலும் ஆலோசனை கூறமுடியாத ஒரு சூழ்நிலை கைதிகளாக அவனும் தானும் இருப்பதாக எண்ணினாள்.
அவளின் சுயநலத்தையும் மீறி ஒரு காதல் அவளுக்குள் பூத்திருந்தது.  அரசனை பார்க்கும் போதெல்லாம் இப்போது கண்ணீர் விட்டாள்.
சுயநலத்தால் அவனை சதா தழுவிகொண்டிருந்த மேனகை முதல் தடவையாக அவனுக்காக மனதிற்குள் அழுதாள்.   மழைச்சாரல் முகத்தில் விழுந்து அவள் கண்ணீருக்கு கவசம் போட்டு கொண்டிருந்தது. 
ஒரே இரவில் பாலாவோரை எங்கும்  வெள்ளகாடாகி விட்டது. அரண்மனையும் இதர குடி மனைகளும் பெரும் வெள்ளத்தில் அல்லோகல்லோலப்பட்டு கொண்டிருந்தன. மழையோ தொடர்ந்து பொழிந்து கொண்டே இருந்தது. இப்படி ஒரு மாரிமழையை கடந்த இருபது ஆண்டுகளில் அவர்கள் கண்டதே இல்லை.  புதிதாக வந்து சேர்ந்துள்ள பார்ப்பனர்களுக்கு இந்த மழை ஒரு  பெரும் சோதனையாகிவிட்டது.
அவர்கள் தங்கி இருந்த கூடாரங்கள் மழை வீச்சுக்கு ஈடு கொடுக்க முடியாமல் ஆட்டம் கண்டது . ஆமானப்பட்ட அரண்மனைகளும் மாடமாளிகைகளும் மழையால் நனைந்து கொண்டிருக்கையில் இவர்கள் தங்கிருந்த கூடாரங்கள் மழை நீரில் தோற்று போனமை ஒரு அதிசயம் அல்லவே?
மழையானது தனது ஆட்டத்தை ஆரம்பித்து உச்சகட்டத்தை நெருங்கி கொண்டிருந்தது.

17 கோபுரம் கழுவப்போன தீவட்டிகள் - பாலாவோரை - 17.. கண்ணீரை சுமந்து வந்த வெற்றி !

பாலவோரை எங்கிலும் ஒரு சகிக்க முடியாத அமைதி குடிகொண்டிருந்தது. அரசன் நிலையோ என்னவென்று அவனுக்கே தெரியாத நிலையில் மக்களுக்கு என்ன தெளிவு கிடைக்கும்?
மழை ஒய்ந்து விட்டது . கோவில் கட்டுமானம் வேலைகளை புறந்தள்ளி விட்டு ஏராளமான பணியாளர்கள் அரண்மனையை செப்பனிடும் அதிசய காட்சி அரங்கேறி கொண்டிருந்தது. பணியாட்கள் அரண்மனையை செப்பனிடுகிறார்களா அல்லது குப்புற கவிழ்க்கிறார்களா என்று ஊர் மக்கள் தமக்கு பேசிக்கொண்டனர். அரசன் குலதிலகனோ ஒரு நிரந்தர மயக்க நிலைக்கு சென்றுவிட்டான். அவனோடு மேனகா பிராட்டியார் மட்டுமே கூட இருக்கிறார். இதர பார்ப்பன பரிவாரங்கள் சென்ற இடமே தெரியவில்லை.
ஏராளமான கேள்விகளுக்கு விடை தெரியாமல் அல்லது விடைகள் தெரிந்து விடுமோ என்ற பயத்தில் மேனகா மௌனமாக அழுதுகொண்டே இருந்தாள்.
தன்னை சுற்றி இருப்பவர்கள் எல்லோரும் பாக்கியத்தம்மாளின் ஆட்கள்தான் என்பதை சரியாகவே உணர்ந்து கொண்டாள். யாரிடம் போய் என்ன விளக்கத்தை கேட்பது? என்னன்னவோ நாடகம் எல்லாம் நடக்கிறது . தானும் அரசனும் உயிரோடு இருப்பதே பெரிய அதிசயம் என்று அவளுக்கு தோன்றியது. போதையில் ஊமையாகிப்போன அரசன் .  மனைவி என்ற அந்தஸ்து இல்லாமலேயே அரசனுக்கு மனைவியாகி கொண்டிருப்பதை எண்ணினாள். எவ்வளவு மோசமான ஒரு  நிலைக்கு வந்து சேர்ந்துள்ளேன் என்று மனதிற்குள் குமைந்தாள்.

18 கோபுரம் கழுவப்போன தீவட்டிகள் - பாலாவோரை 18 புயலில் அடிபட்ட முல்லைக்கொடி a

புத்தூர் நம்பியின் தலைக்கு மேல் ஏராளமான கடமைகள் சுமத்தப்பட்டிருந்தன.  பார்ப்பனர்களின் சகவாசத்தில் ஒரு கோவிலாக  உருமாறி போயிருந்த நேமிநாதர் சமண பள்ளியை மீண்டும் நிர்மாணிப்பது முதல் கடமையாக இருந்தது . அது  பற்றி உரியவர்களோடு பல விதமான ஆலோசனைகளில்   ஈடுபட்டான். சமண பள்ளிகளில் பயின்ற மாணவர்களை தேடிப்பிடித்து மீண்டும் சமண பள்ளிகளில் சேர்க்கவேண்டும் . இடையில் வந்த கோவில் களியாட்டங்கள் அவர்களின் மனதை திசை திருப்பி இருக்க கூடாதே என்ற நியாயமான கவலை பலரையும் ஆட்கொண்டது.

கோவில் கட்டுமானம் பற்றி எல்லாம் தற்போது யாரும் பேசுவதே இல்லை . பார்ப்பனர்களின் நடமாட்டம் இல்லாதபோதே எல்லோருக்கும் நிலைமை புரிந்து விட்டது.  இடையில் வந்த பார்பனீயம் வந்த வழியே மறைந்தும் விட்டது , அது எப்படி இவ்வளவு விரைவாக ஓடிவிட்டது என்பது ஏராளமான மர்மங்கள் நிரம்பிய கனவு போல் தெரிந்தது. என்றாவது ஒருநாள் அதுபற்றி விபரங்கள் வெளியாகும் அதுவரை பொறுத்திருக்க வேண்டியதுதான்.
புத்தூர் நம்பியும் அக்கையரும் மற்றும் இவர்களோடு சேர்ந்த குறிப்பிட்ட சில அமைச்சர்கள் தளபதிகளுக்கு மட்டுமே முழு விபரமும் தெரிந்திருந்தது.
நினைத்த காரியம் எல்லாம் வெற்றிகரமாக நிறைவேறிய மகிழ்ச்சியில் பாலாவோரை மக்கள் இருந்தாலும். அக்கையாரும் நம்பியும் அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லை.
இந்த வெற்றிக்கு அவர்கள் மிகப்பெரிய விலை ஒன்றை கொடுத்து விட்டிருந்தார்கள் என்ற இரகசியம் அவர்களை வாட்டியது.
குலதிலகனின் உடல் நிலை மெல்ல மெல்ல கவலை அளிப்பதாகவே இருந்தது. உரிய வைத்தியர்களை கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டாலும், அவை முழு வீச்சில் நடைபெறுகிறதா என்பது கேள்விக்குறிதான்.
அவன் குணமாக வேண்டும் என்று மேனகா பிராட்டி விரும்புவது மட்டும்தான் நிச்சயமான விடயமாக இருந்தது. அவளுக்கு என்னனவோ சந்தேகங்கள் எழுந்தது ஆனால் பேதைப்பெண் யாரிடம் கேட்பாள்?

19 கோபுரம் கழுவப்போன தீவட்டிகள் - பாலாவோரை 19 - பாக்கியத்தம்மாளின் நெஞ்சில் ஒலித்த வல்லாளன் குளம்பொலி

பாலாவோரையை புரட்டி போட்ட மழை ஓய்ந்து ஆறுமாதங்கள் ஆகி
விட்டிருந்தது.  அந்த மழையை விட மோசமானதாக இருந்தது பாலாவோரை மக்களின் வாழ்க்கை தரம். வழுக்கையாற்று பணிகள் ஒருபுறமும் நேமிநாதர் சமண பள்ளியின் கட்டுமான பணிகள் மறுபுறமுமாக நடை பெற்று கொண்டிருந்தன. புத்தூர் நம்பியும் பாக்கியத்தம்மாளும் மக்களிடம் நல்ல உறவினை பேணியிருந்த காரணத்தால் அரச பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள்  போதிய கூலி உடனேயே கிடைக்காவிடினும்  முழுமனதோடு பணியாற்றினர்,
அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற அரச உதவிகள் எல்லாமே மிகவும் அடிப்படை உதவிகளாகவே இருந்தன. அரச ஊழியத்திற்கு ஏற்ற சன்மானம் உறுதி ஒப்பமிட்ட ஓலைகளாகவே வழங்கப்பட்டன.
மக்களின் முற்று முழுதான ஈடுபாட்டுடன் நேமிநாதர் பள்ளியின் கட்டுமானம் ஓரளவு நிறைவேறியது. மிகப்பெரிய அளவில் அதன் ஆரம்ப விழாவை கொண்டாடவேண்டிய அவசிய தேவை பாலாவோரை அரசுக்கு இருந்தது.
காணாமல் போன பார்ப்பனர்களின் ஆதரவு படைகள் எந்த நேரமும் பாலாவோரையை மோதிப்பார்க்க கூடும் என்று பலரும் எண்ணினர்.
மோதிப்பார்க்க எண்ணுவோருக்கு பாலாவோரையின் பலத்தையும் தயார் நிலையையும் காட்டவேண்டியது மிக அவசியம் உள்ளதல்லவா?
நேமிநாதர் பள்ளியின் தொடக்க  விழா அழைப்பு ஓலைகளை எடுத்து கொண்டு குதிரை வீரர்கள் எல்லா திசைகளுக்கும் பறந்து சென்றனர் .
அயல் தேச மக்களுக்கும் அரசர்களுக்கும் பாலாவோரை மீது மதிப்பும் அதே சமயம் ஒரு வித பொறாமையும் கூட துளிர் விட்டிருந்தது.
பார்ப்பனீய ஆதரவு தேசங்களில் பாலாவோரை மீது கடும் கோபம் நிலவியது. ஆனாலும் அவர்கள் நேரடியாக அந்த கோபத்தை காட்ட தயங்கினர். பாலாவோரையின் தனித்துவம் அயல் தேசங்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருந்த காரணத்தால் வெளிப்படையாக விமர்சிக்க முன்வரவில்லை.

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

சீனி மாமாவும் யார்ட்லி சோப்பும்

1968..  கிளிநொச்சியில் இருந்து ராமநாதபுரம் போகும் பேருந்து திருவையாறு ஹட்சன் ரோடு சில்வா ரோடு ஆறுமுகம் ரோட்டு மற்றும் தருமபுரம் வழியாக புழுதியை கிளப்பி கொண்டு சென்றது .
அந்த பேருந்தில் வெய்யிலும் புழுதியும் பதம் பார்த்த விவசாயிகள் மூட்டை முடிசுகளோடு ஏறுவது இறங்குவதுமான காட்சி உயிர்த் துடிப்போடு ஓடிக்கொண்டு இருந்தது.
ஆறுமுகம் ரோட்டில் இறங்கிய சீனிமாமா தனது மூட்டை முடிச்சுகளை கவனமாக எடுத்து கொண்டு விறு விறுவென்று தனது வீட்டை நோக்கி நடந்தார்.
சீனிமாமாவின் பொதிகளில் இருந்து வரும் யார்ட்லி சோப்பின் வாசனை ஏனைய பயனிகளையும்கூட கொஞ்சம் தழுவி செல்லும்.
 சீனிமாமாவின் வாழ்க்கை கொஞ்சம் வித்தியாசமானது. பழக்க வழக்கங்களில் கொஞ்சம் ராணுவ மிடுக்கு இருக்கும். அனேகமாக எதற்கும் இலகுவில் தனது பழக்க வழக்கங்களை அல்லது கோட்பாடுகளை மாற்றி கொள்ள மாட்டார்.

செவ்வாய், 22 மார்ச், 2016

சிவநந்தினி.....தகுதியற்ற ஒரு மனிதகூட்டம்

சென்ற மாதம் ஒரு ஊருக்கு பிதிர்கடமை செய்வதற்கு நான் போயிருந்தேன். அது ஒரு இளம் பெண்ணின் ஆத்மா சாந்தி பூஜை,
நான் வெறும் பார்ட் டைம் பூசாரி மட்டும்தான்.
வழக்கமாக இது போன்ற காரியங்கள் நான் செய்வதில்லை.எனக்கு அதிக அனுபவம் கிடையாது. ஏனோ வெகு தொலைவில் இருந்து தேடி வந்தார்கள்.
அவர்கள் ஊரில்தான்  ஏராளமாக பூசாரிகள் இருப்பார்களே?
 அந்த ஊர் பிரமுகர் வைத்தியநாதன் வீட்டுக்கு வருமாறு சிலர் என்னை வந்து அழைத்தார்கள்.
சுமார் ஐம்பது கிலோமீட்டர்களுக்கு அப்பால் இருந்து தேடிக்கொண்டு வரவேண்டும் என்பது ஏன் என்று எனக்கு அன்று விளங்கவில்லை.    அது பற்றி கேட்டதற்கு ஏதேதோ பதில்கள் சொன்னார்கள் ஆனால் அவை தெளிவானதாக இருக்கவில்லை. எனக்கு பணம் வந்தால் சரிதானே ஏன் வீண் கேள்விகள் என்று பேசாமல் இருந்துவிட்டேன்.

சனி, 9 ஜனவரி, 2016

ராமனும் ஜாலியாக சனியன் விட்டது...விருந்து களியாட்டங்கள்...

ராமன் ஒரு பணக்கார வீட்டு விளையாட்டு பிள்ளை. பணக்கார அமைச்சர்களின் மகன்களை போல் ஒரு அடாவடி உதவாக்கரை பையனாக இருந்தான் .மது மாது மற்றும் கேளிக்கை விடுதி வில்லங்கங்கள் என ஜாலியாக திரிந்தான். தசரதன் எவ்வளவோ முயற்சி செய்தும் ராமனை ஒரு பொறுப்புள்ள அரச வாரிசாக உருவாக்கவே முடியவில்லை.
பெரும் பிரயத்தனம் செய்து . தங்கள் அந்தஸ்த்துக்கு சமமான ஜனக மகாராஜாவின் புத்திரியான சீதையை கண்டுபிடித்தனர். அவளை  எப்படியாவது ராமனுக்கு திருமணம் செய்து வைத்தால் ராமன் வழிக்கு வந்து விடுவான் என்று பல ஜால்ராக்கள் உபதேசம் செய்யதனர்.
சீதையின் சுயம் வர செய்தியும் வந்து சேர்ந்தது. இங்குதான் சுயம்வரம் என்ற பெயரில்  வில்லங்கம் வந்தது. ராமன் சுயம்வரத்தில் வெல்லகூடிய அளவு பெரும் அழகனோ  திறமைசாலியோ இல்லை. தசரதன்  சீதையின் மனதில் ராமனை பற்றி நல்ல விதமாக சொல்லிவைக்க சிலரை ஏற்பாடு செய்தான். இந்த தந்திரம் நன்றாக வேலை செய்தது. அடிமை சமுகத்தில் இது ஒன்றும் பெரிய காரியம் இல்லை. பணம் வருமென்றால் எதுவும் செய்ய தயாரான கூட்டம் தாராளமாகவே இருந்தது. அப்படி தப்பு தகவல் கொடுக்கப்போன வதந்தி கூட்டம் அந்த சீதைக்கு ஏற்கனவே ஒரு காதலன் இருப்பதாக அரசல் புரசலாக அறிந்தது. இது தசரதனுக்கு நல்ல செய்தி இல்லையே . எனவே அவர்கள் எல்லோரும் கப் சிப் என்று வாயை முடிக்கொண்டு விட்டனர். போதாக்குறைக்கு சீதை பற்றி இல்லாதது பொல்லாததாக தங்கள் பங்குக்கு போலி புகழுரைகளை வேறு அள்ளி வீசி விட்டனர் .

செவ்வாய், 17 நவம்பர், 2015

குரும்பாசியின் மகள் மீனா!

குரும்பாசியின் குடும்பம்  அந்த கிராமத்தின் அடித்தள ஜாதியில் பிறந்து  அடிமட்ட தொழிலையே செய்துகொண்டும் இருந்தது.
அந்த குடும்பத்துக்கு  வந்தது  சோதனை. அவர்கள் மீது ஒரு பெரிய திருட்டு பட்டம் வந்து விழுந்திருக்கிறது.

அந்த ஊரின் கோவில் நகை ஒன்று காணாமல் போய்விட்டது,
முதல் சந்தேகம் என்னவோ குரும்பாசியின் குடும்பத்தின் மீதே விழுந்தது , அது ஏன்?
உண்மையில் கோவிலுக்கும் அவர்களுக்கும் உள்ள தூரம் மிகவும் அதிகம்,
கோவிலுக்குள் செல்லகூடிய உரிமை கிடைத்து விட்டாலும் அவர்கள் அதை அவ்வளவாக உபயோகிப்பதில்லை.
சாமி மீது  வெறுப்போ அல்லது வேறு காரணங்களோ தெரியாது ஆனால் அவர்கள் அந்த கோவிலுக்கு செல்வது மிகவும் குறைவு.
அப்படியாயின் அந்த கோவிலுடன் அதிக தொடர்புள்ளவர்களை அல்லவா சந்தேகப்படவேண்டும்?

செவ்வாய், 15 செப்டம்பர், 2015

சொல்லாமலே புயல் ஒன்று மையம் கொள்கிறது

வத்சலாவின் வாழ்க்கையில் இனி எந்தவிதமான மகிழ்ச்சிக்கும் இடமே இல்லை என்றாகி ரொம்ப நாளாகி விட்டது. அவளின் அப்பா வெறும் டம்மி பீஸ். அம்மா ராசலட்சிமியோ  திமிர் பிடித்த சர்வாதிகாரி. வத்சலாவின் கல்யாண பேச்சு வார்த்தைகள் எல்லாம் ராசலட்சிமி அம்மாவின்  சதுரங்க வேட்டை களமானது தான் மிச்சம், அவன்ரை படிப்பு காணாது இவன்ரை உத்தியோகம் சரியில்லை .இதொன்றும் இல்லையென்றால் அவனது குடும்ப பாரம்பரியம் சரியில்லை என்று ஏதாவது ஒரு காரணத்தை சொல்லியே தட்டி கொட்டி கொண்டே வத்சலாவின் வாழ்க்கையையே குட்டி சுவராக்கி விட்டாள்.
ராசலட்சுமியை எதிர்க்க அந்த வீட்டில் ஆளே இல்லாமல் போய்விட்டது.
வத்சலாவின் இரண்டு அக்காக்களும் அதிஷ்டவசமாக இளமையிலேயே கல்யாணம் செய்து ராசலட்சுமியின் பார்வையில் இருந்து வெகு தூரம் சென்று விட்டனர்.இருந்த ஒரே ஒரு சகோதரன்  குமாரும்  பலவருஷங்களாக அகதியாகி பலநாடுகளுக்கும் மாறி மாறி அலைந்து கொண்டிருந்தான், இவனது அலைச்சலில் சுமார்  பதினைந்து ஆண்டுகள் ஓடி போய்விட்டிருந்தது

சனி, 27 ஜூன், 2015

அந்த இரண்டாயிரம் ரூபாய் !

கொழும்பில் இருந்து அவசரமாக யாழ்ப்பாணம் செல்லவேண்டி இருந்ததால்  வேறு வழியே இல்லாமல் தனியாகவே ஒரு வான் வாடகைக்கு பிடிக்கவேண்டியதாகிவிட்டது .  சுமார் ஆயிரம் ரூபாயில் செல்ல கூடிய பிரயாணத்திற்கு பதினெட்டாயிரம் ரூபாய் செலவழிக்க வேண்டி இருக்கிறதே என்று எனது கால்குலேட்டர் முளை கொஞ்சம்  கன்ஜல் கணக்கு பார்த்து பார்த்து விசனப்பட்டது.
வான் சாரதி வேறு சில பயணிகளையும் சேர்த்து கொஞ்சம் ரேட்டை குறைப்பதாக உறுதி அளித்தான்,
கொழும்பில் இருந்து புறப்பட்ட நாம் தற்போது நீர்கொழும்பை அடைந்து விட்டோம். வான்காரனோ சதா செல்போனில் பேசிக்கொண்டே ஏதோதோ பயணிகள் ஏற்பாடு பற்றி விசாரித்து கொண்டே இருந்தான்,
எனக்கு என்னவோ  இந்த வான் சாரதி வேறு ஒரு பயணியையும் தேடிப்பிடிக்க போவதில்லை என்ற எரிச்சலில் அவனிடம் பேச்சு கொடுத்தேன்.
தம்பி ஒரு ஆளும் கிடைக்கவில்லையோ?
ஒரு வயசு போன அம்மாவும் மகளும் இருக்கினம் ஆனா ... என்று இழுத்தான் .
உடன பிடிக்கவேண்டியதுதானே இவன் என்ன இழுக்கிறான்?
இதையும் கோட்டை விடப்போகிறான், வேற வான்காரர் மடக்கி கொண்டு போய்விடுவினம் ,
தம்பி பிறகென்ன உடன அவயளை போய் ஏத்துவோம் !
அப்ப சரி .. ஆனா அவை கொஞ்சம் வில்லங்கமானஆக்கள் அய்யா!
நாம பேசாம வாயை கொடுக்காம இருந்தா சரிதானே , சும்மா வாற காசையும் ஏன் விடுவான்?
ம்ம்ம்ம் . காசு செலவழிக்கிறது நான்தானே ? இவனுக்கென்ன ஆக்களிண்ட டீடெயில் ஆராய்கிறான்?

ஞாயிறு, 26 மே, 2013

துரத்திகொண்டே இருக்கும் தூவானங்கள் !

ஒட்டவா நகரின் எல்லையில் அமைந்துள்ள ஜெயராஜின் வீட்டில் கடந்த
ஒருவருடமாக எதுவுமே சரியில்லை ; எல்லோரும் ரசிக்கும் படி அழகாக சென்று கொண்டிருந்த அந்தகுடும்பத்தில் யார் கண் பட்டதோ எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது,
அந்த வீட்டின் குடும்ப தலைவன் இளமையில் செய்த ஒரு மாபெரும் தவறு முற்றாகவே மறக்கப்பட்டு  விட்டதாகவே இவ்வளவு காலமும் நம்பி இருந்தான் . ஆனால் அது  பூதாகரமாக மீண்டும் தோன்றுகிறதே?
விலாவாரியாக சொல்லாவிட்டால் புரியாது ,
 அந்த வீட்டின்  இரண்டு பிள்ளைகளும் படிப்பை சாட்டி கொண்டு டொராண்டோவுக்கும் சிகாகோவிற்கும் சென்று விட்டார்கள் .
வீடு திடீரென வெறிச்சோடி விட்டது, அந்த வீட்டில்  நிலவிய அமைதியோ ஏதோ ஒரு வெறுமையை தான் காட்டியது .
அன்பான  குடும்ப தலைவியாக இருந்த பிரேமா தற்போது அடியோடு மாறிவிட்டார் . தனது வேலையையும் விட்டு விட்டார் அல்லது அவர்களாகவே நிறுத்தி விட்டார்கள்.
ஜெயராஜுக்கு ஒன்றும் புரியவில்லை.
பிள்ளைகள் இல்லாத  வீட்டின் வெறுமையை அவரும் உணர்ந்தார் .
அடிக்கடி பிள்ளைகளுடன் செல்லில் பேசி பேசி ஏதோ சமாளித்துகொண்டிருந்தார் .
அந்த வெறுமை பிரேமாவை மிகவும் மோசமாக பாதித்தது என்றுதான் சொல்லவேண்டும் , ஆனால் போக போக அந்த வெறுமையையும் தாண்டி வேறு ஏதோ ஒரு விஷயம் பிரேமாவின் மனதை குழப்புவது போல் தோன்றியது  அவள் சற்று மன நிலை பாதிப்படைந்தவர்கள் போல எதற்கெடுத்தாலும் உணர்சிவசப்பட்டு  கலவரப்பட தொடங்கி விட்டார், தனக்குள் அடிக்கடி பேசி கொள்வார் .
கையில் கிடைத்த பொருட்களை திடீர் திடீர் என்று போட்டு உடைப்பார் , கேட்டால்  எந்த பதிலும் வராது அல்லது இடக்கு மிடக்காக ஏதொதோ சொல்லுவார் ,
தனக்கு தலை சரியில்லை என்று தானே சொல்லுவார்,
உளவியல் மருத்துவரிடம் செல்லும்போது மட்டும்  மிகவும் ஒழுங்காக நடந்து கொள்வார்.
அவர்களுக்கும்  கூட பிரேமாவின் மன நிலை சரியாக பிடி படவில்லை .

சனி, 25 மே, 2013

தேவைகள் உன்னை துரத்தும் வரை தான் ....

அவள் ஒரு அழகான ஒரு குட்டி  தீவின் சுகவாசி .அந்த தீவின் ரம்மியத்தை
ரசித்துகொண்டிருந்தாள்  .
அவளை சந்திக்கும் பலரும் வேறு ஒரு பெரிய கற்பனைக்கு எட்டாத அற்புத தீவை பற்றி புகழ்ந்து புகழ்ந்து பேசிகொண்டேயிருந்தர்னர் . அதைப்பற்றிய வர்ணனைகளால் நாளடைவில் அவளுக்கும் எப்படியாவது அந்த அற்புத தீவுக்கு செல்ல வேண்டும் என்று தோன்றி நாளடைவில் அது அவளது ஒரே நோக்கம் என்றாகி விட்டது ,
தான் குடியிருக்கும் குட்டி தீவின் எந்த அழகும் தற்போது அவளை இப்போது அதிகம்  கவர்வதில்லை, எப்போது  அந்த அற்புத தீவை அடைவோம் என்ற ஒரே சிந்தனையில் காலம் கழிந்தது ,
பல நாள் விடா முயற்சியின் பின்பு அவளது எண்ணம் நிறைவேறக்கூடிய தருணம் வந்தது , அந்த அற்புத தீவுக்கு செல்லும் படகு ஒன்று அவளருகில் வந்தது . அவளும் மிக மகிழ்வுடன் படகில் ஏறிக்கொண்டாள் .
செல்லும் வழிதோறும் சொர்க்கம் என்று வர்ணிக்கப்படும் அந்த தீவை பற்றிய பலவிதமான கற்பனைகளுடன் யாத்திரை செய்து  இறுதியில் அந்த தீவை அடைந்ததும் விட்டாள் ,
தனது நோக்கம் நிறைவேறிய மகிழ்ச்சியில் துள்ளி குதித்து ஆனந்தித்தாள் ,
எல்லோரும் குறிப்பிட்டது போலவே அழகான மரங்கள் மலர்கள் சின்ன சின்ன மலை குன்றுகள் ஏராளமான பழவகைகள் கொண்ட அற்புத சோலைகள் எல்லாவற்றிலும் மேலாக அழகான மாந்தர்கள் என்று எல்லோரும் குறிப்பிட்ட நல்ல காட்சிகளையே அவள்  கண்டாள் ,
சில நாட்கள் தன்னை மறந்து தனது பழைய தீவின் சகல ரம்மியங்களையும் மறந்து இருந்தாள் ,
எந்த விடயத்திற்கும் காலம் வேறு வேறு விதமான அர்த்தங்களை தந்து கொண்டிருக்கும் தானே ?

வியாழன், 23 மே, 2013

அது ஒரு காகித கல்யாணம்

மனிஷாவின் தாய் இந்திய  தந்தையோ  வெள்ளைக்காரன்
அவள் சில சமயங்களில்

ஒரு வெள்ளைகாரி போலவும் சிலசமயம் அசல் பஞ்சாபி போலவும் பேசுவாள். ஏராளமான குழப்பங்கள் அவள் மனதில் இருப்பது எனக்கு தெரியும், அவளுக்கு தான் ஒரு இந்திய வம்சாவளி என்ற பெருமையும் அதேசமயம் இந்தியர்கள் மிக மோசமானவர்கள் என்ற அபிப்பிராயம் சேர்ந்தே இருந்தது.
போஸ்டன் பகுதியில் சதா புதிதிதாக இந்தியர்கள் பாகிஸ்தானியர்கள் போன்ற தெற்காசிய மக்கள் வந்த வண்ணமே இருப்பார்கள் . எப்போது புதியவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை மிக அதிகமாக இருந்ததனால் அவளுக்கு ஏராளமான நண்பர்கள் இருந்தனர்.
சதா இந்தியர்களை  திட்டிய படியே அவர்களுக்கு ஓடி ஓடி உதவிசெய்த வண்ணமே இருப்பாள் .
சுமார் முப்பது வயதாகியும் சரியான கணவனோ காதலனோ அவளுக்கு அமையவில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஏராளமான கோரிக்கைகள் அவளை நோக்கி வந்தவண்ணம் இருந்தன . ஆனால் அவளுக்கு எதோ ஒருவரையும் பிடிக்கவில்லை. திடீரென அவனை கல்யாணம் செய்ய போகிறேன் என்று எல்லோருக்கும் சொல்வாள் . பின்பு  சில நாட்கள் கழிந்ததும் அவனை எனக்கு பிடிக்க வில்லை அவன் வெரி boring என்பது போன்ற ஏதாவது ஒரு நொண்டி காரணம் சொல்லுவாள் .
மனிஷா மீது உண்மையான அக்கறை கொண்ட எல்லோருமே ஏறக்குறைய நம்பிக்க இழந்து விட்டனர் , இவளில் ஏதோ ஒரு கோளாறு இருக்கிறது எல்லாவற்றையும் தட்டி கழிக்கிறாள் என்று அலுத்து கொண்டனர்,
ஒரு நாள் என்வீட்டுக்கு வந்து தனக்கு திருமணம் டெல்லியில் நிச்சயமாகி இருக்கிறது என்று சொன்னால் . போட்டோவும் காட்டினாள்.

வியாழன், 9 மே, 2013

விஷ்ணுதாசரின் ஜென்மம் முழுதும் அந்த முகம் ?

அப்புச்சி இப்படி நொறுங்கிடுவார்னு நான் ஒருக்காலும் கருதலையே? அப்புச்சி
எவ்வளவோ நல்ல மனிஷன் ஆனால் ஏதோ போறாத காலம் , அந்த ஸ்ரீ சுதான்ன சிறுக்கியை பிடிச்சிட்டார் ,
அதுகூட பரவாயில்லை ஆனால் அவளை வீட்டுக்கே கூட்டியாந்திட்டரே ?
என்னத்தை சொல்ல ? எல்லாம் தலைவிதி , அவன் என் தலைல எழுதிட்டான் ,
எனக்கு தான் நிறைய விஷயம் புரியல வாழ்க்கைன்னா என்னன்னும் தெரியல,
அப்புச்சி சதா கச்சேரின்னு ஊர் ஊரா சுத்திட்டே இருக்கும் , எந்த ஊருக்கு போனாலும் எனக்குன்னு எதாச்சும் வாங்கிரும் , அதுதான் வாழ்க்கைன்னு வெகுளியா இருந்தேன் ,
 அப்புச்சிக்கு விஷ்ணுதாசர்ன்னுதான் பேர் ஆனா அப்புச்சி அப்புச்சின்னு அதுதான் அவர்பேராயிடுச்சு, என்பேர் சரஸ்வதிஆனா  இப்ப சச்சுவாயிடுச்சு,

அப்புச்சியோட சரியா பேசகூட எனக்கு தெரியல்ல ,
அந்த ஸ்ரீ சுதா அப்புச்சியோட பேசறப்போ எல்லாம் ரொம்ப ரசனையா இருக்கும் அவளுக்கு தான் எத்தனை விஷயங்கள் தெரியும் , சும்மா சொல்ல கூடாது அப்புச்சியை விட அவளுக்கு அறிவும் ஜாஸ்த்தி அழகும் ஜாஸ்த்தி ,
அவமேல நான் பொறாமை பட்டு என்னதான் ஆவப்போவுது ? ஒருவேளை ஆரம்பத்திலேயே நான் பொறாமை பட்டு சண்டை பிடிச்சிருந்தா அப்புச்சி அவளை கைவிட்டிருக்குமோ ?
நான் ஒரு பைத்தியம் அவளோட பாட்டையும் பேச்சையும் நானே ரசிச்சு ரசிச்சு கேப்பேனே ? அப்புச்சிக்கு வேற பெண் சகவாசம்கூட இருக்குன்னும் ஒருவாட்டி சொன்னா ,
என் அப்புச்சி என்னையை விட்டு அவளோடு சாயறார்ன்னு கூட எனக்கு தோணலையே? அவ்வளவு மண்டுகம்,

திங்கள், 6 மே, 2013

அந்த அழகான மல்லிகை சிரிப்பு

தூசிகளின் தலைநகரம் என்று சொல்லக்கூடிய அளவும் மோசமான அளவு
தூசியும் குப்பையும் நிறைந்தது  அந்த பேருந்து நிலையம், எவ்வளவுதான் படு மோசமான நிலையில் இருந்தாலும் மக்கள் கூட்டமோ நெரிசலாக இருக்கும் , வேறு வழி ?
ஒவ்வொரு பேருந்தும் வரும்போது அள்ளிவரும் தூசி இருக்கிறதே சொல்லி மாளாது . விரைவில் ஊர் போய் சேர வேண்டும் என்ற துடிப்பில் இருக்கும் ஜனக்கூட்டமோ அந்த பேருந்தை நோக்கி படுவேகமாக போய் ஏறிவிடுவார்.
அந்த ஜனக்கூட்டத்தில் யாருமே சிரித்து மகிழ்சியோடு முகத்தை வைத்திருக்கும் காட்சியை காணவே முடியாது ,
எப்போதும் ஒரு கடுமையான பாவத்தோடு அல்லது முகத்தை தொங்க போட்டுகொண்டு ஏதோ நோய் வாய்ப்பட்டவர்கள் போல காட்சி அளிப்பார்கள் ,
இது ஏன் என்று விளக்கப்போனால் பெரிய விவகாரமாகிவிடும் , அவ்வளவு இலகுவில் சொல்லி விடக்கூடிய செய்தியும் அல்ல அது .
எந்த ஒரு காரிருளிலும் ஒரு சிறிய ஒளியாவது தெரியும் அதே போல எவ்வளவு பிரகாசமான ஒளியினுள்ளும் ஒரு இருள் இருக்கும் என்று எங்கேயோ நான் படித்த ஞாபகம் ,
எந்தவித மென்மையான உணர்வுகளும் இல்லாது மிகவும் இறுக்கமான ஒரு அமைதி நிலவிய அந்த  பேருந்து நிலையத்தில் ஒரு வித்தியாசமான வேடிக்கையான  காட்சி  அடிக்கடி  அரங்கேறி கொண்டிருந்தது ,
சுமார் அறுபது வயது மதிக்கத்தக்க உயரமான மனிதன் வேடிக்கையான விளம்பரங்கள் எல்லாம் எழுதப்பட்டிருந்த ஆடைகள் அணிந்து ஆடி பாடி அதிஷ்ட லாபச்சீட்டுக்களும்  மற்றும் இனிப்பு பலகாரங்கள் போன்ற சிறு சிறு
பொருட்களும் விற்று கொண்டிருப்பார் .

ஞாயிறு, 8 ஜூலை, 2012

கற்பூரம் தேடிய கழுதை ஒன்று

இரவு மூன்று மணியை கடந்துகொண்டிருக்கிறது ஆனாலும் அந்த வீட்டில் தூக்கம் இல்லை. உஷாவும் பரமும் தாங்கள் பொருந்தாத தம்பதிகள் தான் என்பதை பரஸ்பரம் உணர்ந்துகொள்ளும் கசப்பு மாத்திரையை மாறி மாறி விழுங்கிகொண்டார்கள்.
நாளை ஒரு நடன கச்சேரிக்கு பாட்டு பாட வேண்டியுள்ளது. அட டா இப்படி தூங்காமல் சண்டை பிடித்து கொண்டிருந்தாள் எப்படி நாளை பாட முடியும்?
உஷா அழுது அழுது கலைத்து விட்டாள்.
விஷயம் இதுதான் அந்த நடன நிகழ்ச்சியை தனது வீடியோவில் பதிவு  செய்ய போவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் சொன்ன பொது அவர்கள் மிக அழுத்தமாக மறுத்து விட்டார்கள். பிடிவாதக்கார பரமோ இதை ஒரு கௌரவ பிரச்சனையாக எடுத்துக்கொண்டு நாளை பாட என் மனைவி வரமாட்டா என்று கோபமாக சொல்லிவிட்டான் .
ஏற்பாட்டாளர்கள் ஆடிப்போய் விட்டனர். பலநாள் ஒத்திகை பார்த்து பார்த்து உருவாகிய ஒரு நடன அரங்கேற்ற நிகழ்ச்சியது. இனி திடுதிப்பென்று அதில் மாறுதல் பண்ணவே முடியாது. நடனம் ஆடும் சிறுமியும் பெற்றோர்களும் கூட இரவு தூங்காமல் ஒரே டென்ஷனில் இருந்தார்கள்.

சனி, 7 ஜூலை, 2012

அய்யாவை சுற்றி கேள்விகள் மட்டும்தான்

இது அறுபதுகளில் நடந்த சம்பவம். வெறும் புழுதி படிந்த தலையும் தூசி படிந்த கோட்டுமாக முழு  போதையில் மணிக்கூட்டு கோபுர வீதியில் சுகமாக  அசந்து தூங்கி கொண்டிருந்தார் ஒரு படித்த பெரிய மனிதர்.
 சகல விதமான வழிப்போக்கர்களுக்கும் இது ஒரு புதிய காட்சி அல்ல.அவரின் கதையும் ஓரளவு எல்லோரும் அறிந்ததுதான்.
அந்த படித்த பெரிய மனிதன் சிவசுப்ரமணியம் இந்த இடத்தில் வீழ்ந்து கிடப்பதற்கு பெரிய காரணம் இருப்பது என்னவோ உணமைதான்.
இவரை பற்றி மக்கள் பேசிக்கொள்வது இதுதான்,
இவர்  இளமையில் சாதியில் குறைந்த பெண்ணை காதலித்தார். இதை கண்டு பிடித்த பெற்றோர் தந்திரமாக இங்கிலாந்துக்கு அனுப்பி விட்டார்கள். இவரும் படிப்பு முடித்து வந்து இந்த பெண்ணை சத்தம் போடாமல் கூட்டிக்கொண்டு ஓடி விடலாம் என எண்ணிக்கொண்டே நாட்டை விட்டு புறப்பட்டார்.
சாதி தடிப்புடன் குள்ளநரித்தனமும் கொண்ட இவரது குடும்பத்தினர் இவர் நம்பும்படி இவரது நண்பர் மூலம் இவரது காதலிக்கு வேறு கல்யாணம் ஆகிவிட்டதாகவும் இரண்டு குழந்தைகள் வேறு உள்ளதாகவும் கதை அளந்தார்கள்.இந்த அப்பாவி மனிதன் அதை நம்பி மனம் உடைந்து குடிக்க தொடங்கினார். பின்பு என்ன நிறுத்த முடியாமல் அல்ல அல்ல நிறுத்தத்த விருப்பம் இல்லாமல் குடியே கதியானர்,